திணை குக்கிஸ் (foxtail millet cookies in tamil)

#HJ இதில் நான் வெள்ளை சர்க்கரை எதுவும் சேர்க்கவில்லை இதில் வெல்லம் சேர்த்து சத்தானதாக செய்துள்ளேன்..
திணை குக்கிஸ் (foxtail millet cookies in tamil)
#HJ இதில் நான் வெள்ளை சர்க்கரை எதுவும் சேர்க்கவில்லை இதில் வெல்லம் சேர்த்து சத்தானதாக செய்துள்ளேன்..
சமையல் குறிப்புகள்
- 1
பொடித்த வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் சேர்த்து நான்கு ஸ்பூன் அளவு தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும்..
- 2
தினை மாவு கோதுமை மாவை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் நெய் சேர்த்து முதலில் கலந்து கொள்ளவும்..
- 3
அதனுடன் நாம் கரைத்து வைத்துள்ள வெல்லத்தையும் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.. எனக்கு இதே சரியாக இருந்தது உங்களுக்கு மாவு பிசைய வரவில்லை என்றால் இரண்டு ஸ்பூன் அளவு பால் சேர்த்து பிசைந்து கொள்ளவும்..
- 4
பிசைந்து வைத்த மாவை லேசான தடிமனாக தேய்த்து வட்ட வட்டமாக கட் செய்து கொள்ளவும்.. அதை ட்ரேயில் பட்டர் பேப்பர் போட்டு அதன் மேல் அடுக்கி வைக்கவும்..
- 5
ப்ரீஹீட் செய்த அவனில் 180°செல்சியஸில் 15 நிமிடங்கள் பேக் செய்யவும்..
- 6
இதில் நீங்கள் விருப்பப்பட்டால் ஏலக்காய் தூள் சேர்த்துக் கொள்ளலாம்..
- 7
இப்போது அருமையான சத்தான திணை குக்கீஸ் தயார்..
Keywords
Similar Recipes
More Recipes


















கமெண்ட் (9)