உங்களது ரெசிபியை இன்று செய்து பார்த்தேன். அட்டகாசமாக இருந்தது. மஹாளய அமாவாசை என்பதால், வெங்காயம், பூண்டு சேர்க்கவில்லை. தேங்காய் துருவலுடன், ப.மிளகாய் சேர்த்து மைய அரைத்தேன். அதேபோல் தாளிக்கும் போது, சி.மிளகாய் சேர்த்து தாளித்தேன். கூட்டின் சுவை அபாரம்.செய்வதற்கும் சுலபமாக இருந்தது. நன்றி சகோதரி.