கொத்தமல்லி தேங்காய் சட்னி

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
USA

கொத்தமல்லி ஒரு சிறந்த சமையல் மூலிகை. நல்ல மணம் தருவதுடன், இரத்த அழுத்தம், குளுக்கோஸ் அளவு, கொழுப்பு அளவு கட்டுபாட்டில் வைக்கும். #Flavourful

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
10 பரிமாறுவது
  1. 2 மேஜைகரண்டி நல்லெண்ணை
  2. ½ கப் கடலை பருப்பு
  3. 1 மேஜைகரண்டி உளுந்து
  4. 1 மேஜைகரண்டி தனியா
  5. 1 கப் தேங்காய் துண்டுகள்
  6. 4பச்சை மிளகாய்
  7. 6கப் கொத்தமல்லி
  8. 1 அங்குலம் தோலுரித்த இஞ்சி
  9. ½ கப் தயிர்
  10. தேவையானஉப்பு
  11. தாளிக்க:
  12. 1 தேக்கரண்டி கடுகு
  13. 1 தேக்கரண்டி சோம்பு
  14. சிட்டிகை பெருங்காயம்
  15. ¼ கப் கறிவேப்பிலை
  16. சட்னி

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு செக்கலிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க

  2. 2

    மிதமான நெருப்பின் மேல் ஒரு வாணலியில் சூடான எண்ணையில் பருப்புகள் வறுக்க பொன்னிறமாகும் வரை. தனியா சேர்த்து வறுக்க. பச்சை மிளகாய், கொத்தமல்லி, இஞ்சி சேர்த்து வதக்க. அடுப்பை அணைத்து வெளியே எடுத்து நீரில் ஊறவைக்க;.

  3. 3

    ஊற வைத்த பொருட்கள் அனைத்தையும் பிளெண்டரில் அறைக்க. தேங்காய் துண்டுகள் சேர்த்து அறைக்க. அறைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்து உப்பு தயிர் சேர்த்து கிளற.
    மிதமான நெருப்பின் மேல் வாணலியில் சூடான எண்ணையில் கடுகு, சோம்பு, பெருங்காயம் போட்டு தாளிக்க. கறிவேப்பிலை சேர்க்க. அடுப்பை அணைக்க. தாளிக்கையை சட்னி உடன் சேர்த்து கலக்க. கொத்தமல்லி தூவி அலங்கரிக்க

  4. 4

    சுவையான சத்தான சட்னி தயார்.ருசி பரர்க்க. இட்லி. தோசை. அடை அல்லது பொங்கலோடு பரிமாறுக

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
அன்று
USA
I am a scientist with a Ph.D from University of Michigan. Ann Arbor. I also have a M. SC from University of Madras. Enjoy sharing my knowledge in science and my experience in gardening and cooking with others. I am a free lance writer, published several articles on Indian culture, traditions, Indian cuisine, science of gardening and etc in National and Inernational magazines. I am a health food nut. I am passionate about photography
மேலும் படிக்க

Similar Recipes