எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  1. 4 ஸ்பூன் பயத்தம்பருப்பு
  2. 1உருளைக்கிழங்கு
  3. 1 பெரிய வெங்காயம்
  4. 2 தக்காளி
  5. 1/2 மூடி எலுமிச்சை
  6. 4 பற்கள் பூண்டு
  7. 3 பச்சை மிளகாய்
  8. 1 ஸ்பூன் சோம்பு
  9. 1 ஸ்பூன் பொட்டுக்கடலை
  10. 4 முந்திரி
  11. தேவையான அளவு உப்பு
  12. 4 ஸ்பூன் தேங்காய் துருவல்
  13. 2 ஸ்பூன் எண்ணெய்
  14. 1 ஸ்பூன் நெய்
  15. 1 ஸ்பூன் கடுகு
  16. 1 ஸ்பூன் சீரகம்
  17. 2 கிராம்பு
  18. 1 பட்டை
  19. தேவையான அளவுகொத்தமல்லி இலை
  20. 1 ஸ்பூன் சக்கரை
  21. பெருங்காயத்தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    பயத்தம்பருப்பு உருளைக்கிழங்கு மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்து கொள்ள வேண்டும்

  2. 2

    தேங்காய், 2 பச்சை மிளகாய், சோம்பு, முந்திரி, பொட்டுக்கடலை ஆகியவையுடன் தண்ணீர் சேர்த்து மைய அரைத்து வைத்துக் கொள்ளவும்

  3. 3

    கடாயில் எண்ணெய் நெய் விட்டு கடுகு, சீரகம், பட்டை, கிராம்பு,பூண்டு, பச்சை மிளகாய் தாளிக்கவும்

  4. 4

    வெங்காயம் தக்காளி வதக்கி வேக வைத்த பருப்பு உருளைக்கிழங்கை மசித்து சேர்க்கவும்

  5. 5

    அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விடவும்

  6. 6

    தேவையான அளவு உப்பு, பெருங்காயத்தூள், சிறிது மஞ்சள்தூள் சேர்க்கவும்

  7. 7

    சக்கரை சேர்த்து இடைவெளி விட்டு மூடி மிதமான தீயில் 5 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்

  8. 8

    அடுப்பை அனைத்து விட்டு எலுமிச்சை பிழிந்து, கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்

  9. 9

    இட்லி அல்லது தோசையுடன் பரிமாறவும். சப்பாத்தியுடனும் பரிமாறலாம். மிகவும் சுவையாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sai's அறிவோம் வாருங்கள்
அன்று

Similar Recipes