முறுமுறுப்பான உருளைக்கிழங்கு டொர்னேடோ

#மழைக்காலஉணவுகள்
வீட்டிலேயே சுலபமாக செய்யலாம். கொஞ்சம் பயிற்சி தேவை. குழந்தைகள் என்ன பெரியவர்கள் கூட இதன் வடிவத்திற்காக விரும்பி சாப்பிடுவார்கள். மழைக்காலத்தில் சூடாக இதனை சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும்
முறுமுறுப்பான உருளைக்கிழங்கு டொர்னேடோ
#மழைக்காலஉணவுகள்
வீட்டிலேயே சுலபமாக செய்யலாம். கொஞ்சம் பயிற்சி தேவை. குழந்தைகள் என்ன பெரியவர்கள் கூட இதன் வடிவத்திற்காக விரும்பி சாப்பிடுவார்கள். மழைக்காலத்தில் சூடாக இதனை சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் உருளைக்கிழங்கை கழுவி நன்றாக துடைத்து க்ரில் கம்பியைக் கொண்டு கிழங்கின் நடுவில் அழுத்தவும்.
- 2
கம்பியின் ஓரத்தை விட்டு சற்று உள்ளே நகர்த்திவிட்டு கூர்மையான கத்தியைக் கொண்டு சரிவாக வெட்ட ஆரம்பிக்கவும்.
- 3
கம்பியைத் திருப்பிக் கொண்டே சென்று சம இடைவெளி விட்டு வெட்டவும். பிறகு கிழங்கை மெதுவாக இழுக்கவும்.
- 4
உருக்கிய வெண்ணெய்யை கிழங்கின் மீது தடவவும்.
- 5
ஒரு பாத்திரத்தில் துறுவிய சீஸ் சோளமாவு பூண்டுத்தூள் பாப்ரிகா உப்பு போட்டு அதோடு சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் ஆக்கிக் கொள்ளவும்.
- 6
அதை கிழங்கின் எல்லாப் பகுதியிலும் தோய்த்து எடுக்கவும்.
- 7
160 டிகிரியில் ப்ரீ ஹீட் செய்யப்பட்ட அவனில் பத்து நிமிடங்கள் வைக்கவும்.
- 8
பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி அதிலே அவனிலிருந்து எடுத்த கிழங்கை கவனமாக போட்டு இருபுறமும் பொன்னிறமாக பொறித்தெடுக்கவும்.
- 9
பிறகு துருவிய சீஸ்ஸை மேலே தூவி சாஸுடன் சாப்பிடவும்.
Keywords
Similar Recipes
More Recipes











கமெண்ட்