குலோப்ஜாமுன் சீஸ் கேக்-(Globejamun cheese cake recipe in tamil)

பொதுவாக கிறிஸ்மஸ் க்கு கேக் செய்வது வழக்கம். எப்பொழுதும் செய்யவும் பிளம் கேக்கை தவிர்த்து புதிதாக இப்படி குலோப்ஜாமுன் வைத்து ஒரு சீஸ் கேக் செய்து இந்த கிறிஸ்மஸ்சை கொண்டாடுங்கள். இந்த கேக் செய்வதற்கு ஓவன் அடுப்பு தேவை இல்லை. #grand1 No oven& No Springform pan
குலோப்ஜாமுன் சீஸ் கேக்-(Globejamun cheese cake recipe in tamil)
பொதுவாக கிறிஸ்மஸ் க்கு கேக் செய்வது வழக்கம். எப்பொழுதும் செய்யவும் பிளம் கேக்கை தவிர்த்து புதிதாக இப்படி குலோப்ஜாமுன் வைத்து ஒரு சீஸ் கேக் செய்து இந்த கிறிஸ்மஸ்சை கொண்டாடுங்கள். இந்த கேக் செய்வதற்கு ஓவன் அடுப்பு தேவை இல்லை. #grand1 No oven& No Springform pan
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் குலோப்ஜாமுன் மாவை சேர்த்துக் கொள்ளவும்.
- 2
1/4 கப் தண்ணீர் சேர்த்து பிரெட் கிரம் ஸ் போல் மாவை பிசைந்து கொள்ளவும். நன்றாக அழுத்தம் தந்து மாவை பிசைய கூடாது.
- 3
மாவில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்துக் கொள்ளவும். பின்னர் கைகளில் நெய்யைத் தடவிக் கொள்ளவும். மாவிலிருந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
- 4
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி செய்து வைத்திருக்கும் சிறிய உருண்டைகளை எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
- 5
ஒரு அடிகனமான பாத்திரத்தில் 2 கப் சர்க்கரை சேர்த்து அதில் 1&1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து சர்க்கரை பாகு செய்து கொள்ளவும்
- 6
செய்து வைத்திருக்கும் குலாப்ஜாமுன் சர்க்கரை பாகில் ஊற வைக்கவும்.
- 7
மிக்ஸியில் 7 பிஸ்கட் துண்டுகளை சேர்த்து பொடித்துக் கொள்ளவும்.
- 8
பொடித்த பிஸ்கட் துண்டில் 3 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் அல்லது நெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- 9
பார் சிமெண்ட் பேப்பரை கேக் பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளவும்
- 10
பின்னர் செய்து வைத்திருக்கும் அந்த பிஸ்கட் கலவையை கேக்கில் அடி பகுதியாக வருமாறு பரப்பிக் கொள்ளவும். இதை ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைக்கவும்.
- 11
ஒரு மிக்ஸியில் துருவிய பன்னீர் 1 கப் மற்றும் பொடித்த சர்க்கரை 1/2 கப் சேர்த்துக் கொள்ளவும். நன்றாக மிக்ஸியில் அடித்து எடுத்தால் க்ரீம் சீஸ் தயார்.
- 12
அதில் 3 டேபிள் ஸ்பூன் கண்டன்ஸ்டு மில்க் மற்றும் 1 கரண்டி ப்ரஷ் க்ரீம் சேர்த்து நன்றாக அடித்து கொள்ளவும்.
- 13
ஒரு பாத்திரத்தில் 200ml தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும் பின்னர் அதில் 2 டேபிள் ஸ்பூன் ஜெலட்டின் சேர்த்துக் கொள்ளவும்
- 14
இப்பொழுது செய்து வைத்திருக்கும் ஜெலட்டின் கலவையை க்ரீம் சீஸ் மிக்ஸில் சேர்க்கவும். அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- 15
அரை மணி நேரம் பிரிட்ஜில் இருந்து எடுத்த பிறகு பிஸ்கெட் லேயர் மேல் குலோப்ஜாமுன் அடுக்கிக் கொள்ளவும். அதன் மேல் செய்து வைத்திருக்கும் க்ரீம் சீஸ் கலவையை சேர்க்கவும்.
- 16
பின்னர் அதை மூன்று மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
- சிகப்பு கவுணி அரிசி புட்டு (Sikappu kavuni arisi puttu recipe in tamil)
- வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
- முடக்கொத்தான் கீரை தோசை 🍥🍥(Mudakkathan keerai dosai recipe in tamil)
- சாக்கோ பட்டர் குக்கீஸ்(Choco butter cookies recipe in tamil)
- ஜாகோ கேரட் ஸ்வீட் (Sago carrot sweet recipe in tamil)





































கமெண்ட் (4)