ஃப்ளோட்டிங் ஐலண்ட்

ஃப்ளோட்டிங் ஐலண்ட்
சமையல் குறிப்புகள்
- 1
முட்டையின் வெள்ளை மற்றும் மஞ்சள் கருவை தனி தனியே எடுக்கவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் 1 1/2 கப் பால் ஊற்றி காய்ச்சவும்.
- 3
மெரிங் செய்ய, ஒரு வட்டமான கிண்ணத்தில் முட்டை வெள்ளை கருவை சேர்த்து சிட்டிகை உப்பு சேர்த்து முட்டை அடிக்கும் எலக்ட்ரிக் பீட்டர் கொண்டு அடிக்கவும்.. இடையிடையே 3 மேசைக்கரண்டி சர்க்கரையை சேர்த்து நன்றாக இரண்டு மடங்காக வரும் வரை அடிக்கவும். (Stiff peaks எனப்படும் தலை கீழாக கவிழ்த்தாலும் முட்டை கீழே விழா வண்ணம் இருக்கும் வரை அடித்து கொள்ளவும்). மிகவும் அதிக நேரம் முட்டையை அடித்தால் நீர்த்து விடும்.
- 4
இப்போது இரண்டு ஸ்பூன் கொண்டு அடித்து வைத்துள்ள மெரிங்கை எடுத்து காய்ச்சிய பாலில் போட்டு சுமார் 30 வினாடிகள் வரை வேக விடவும். (இரு பக்கங்களும் திருப்பி வேக விடவும்). சிறிது அதிகமான நேரம் வெந்தாலும் முட்டை அமுங்கி விடும். எனவே கவனம் தேவை.
- 5
வேக வைத்த இந்த மெரிங்கை ஃப்ரிஜ்ஜில் வைக்கவும்.
- 6
இடையே ஒரு பாத்திரத்தில் முட்டை மஞ்சள் கருவில் 2 மேசைக்கரண்டி சர்க்கரை, வெண்ணிலா எசன்ஸ் மற்றும் 1/2 கப் பால் சேர்த்து நன்றாக கலந்து அடுப்பில் இருக்கும் பாலில் ஊற்றவும்.
- 7
இந்த கஸ்டர்ட் கலவை திக்கான உடனே அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும். பிறகு அதை ஃப்ரிஜ்ஜில் வைத்து குளிர்விக்கவும்
- 8
இப்போது ஒரு பாத்திரத்தில் 1/2 கப் சர்க்கரை மற்றும் 1 மேசைக்கரண்டி தண்ணீர் சேர்த்து நன்றாக பொன்நிறமாக வரும் வரை காய்ச்சி இறக்கவும்
- 9
ஒரு பட்டர் பேப்பரில் இந்த காரமலை ஒரு ஸ்பூன் கொண்டு ஊற்றவும்
- 10
ஆறிய பின் விருப்பமான அளவில் உடைத்து கொள்ளவும்
- 11
பரிமாறும் பொழுது கஸ்டர்ட் கலவை ஊற்றி அதன் மீது மெரிங் வைத்து காரமல் மிட்டாய் கொண்டு அலங்கரிக்கவும்.
- 12
இதோ சுவையான சத்தான மிதக்கும் தீவு தயார்
Similar Recipes
More Recipes





கமெண்ட்