நெய் மைசூர் பாக் 😋 தமிழ்நாடு ஸ்பெஷல் (Nei Mysore Pak Recipe in Tamil)

நெய் மைசூர் பாக் 😋 தமிழ்நாடு ஸ்பெஷல் (Nei Mysore Pak Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.ஒரு பௌலில் கடலை மாவு மற்றும் எண்ணெய் சேர்த்து நன்றாக கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளவும்.
- 2
பின்குறிப்பு--- (மைசூர் பாகை மிதமான சூட்டில் வைத்தே கிளறவேண்டும்).ஒரு வாணலியில் அரை கப் தண்ணீர் சேர்த்து அதனுடன் சர்க்கரை சேர்த்து சர்க்கரை நன்றாக கரையும் வரை கலக்கவும். பின்பு சர்க்கரை பாகு ஒரு கம்பி பதம் வரும் வரை காய்ச்சவும்.
- 3
ஒரு கம்பி பதம் வந்தவுடன் கரைத்து வைத்துள்ள கடலை மாவு கலவையை அதில் சேர்த்து கைவிடாமல் மிதமான சூட்டில் வைத்து தொடர்ந்து கிளறிக் கொண்டே இருக்கவும். மைசூர் பாக்கு எண்ணெயை நன்றாக உறிஞ்சி கொள்ளும் அதன் பின் சிறிது சிறிதாக நெய் விட்டு நெய் உறிஞ்சும் வரை கிளறி மீண்டும் மீதி நெய்யை சேர்த்து மிதமான சூட்டில் கைவிடாமல் கிளறவும்.
- 4
இறுதியாக மைசூர் பாகு வாணலியில் இருந்து பிரிந்து வரும். அப்பொழுது நெய் அல்லது எண்ணை தடவிய தட்டு அல்லது ட்ரே வில் சேர்க்கவும்.
- 5
20 நிமிடம் கழித்து மைசூர்பாகு தேவையான வடிவில் துண்டுகள் போடவும். அவ்வளவுதான் சுவையான நெய் மைசூர்பாகு தயார் 😋👍.
Keywords
Similar Recipes
More Recipes
- காளான் மிளகு வறுவல் (Mushroom Pepper Fry Recipe in Tamil)
- பன்னீர் கோதுமை மோமோஸ் (Paneer wheat Momos Recipe in tamil)
- நெய் தேங்காய் சாதம்- தக்காளி தொக்கு(தமிழ் நாடு) (Nei Thengai Saatham Recipe in Tamil)
- குழிப்பணியாரம்(தமிழ்நாட்டு ஸ்பெஷல்) (Kulipaniyaram Recipe in Tamil)
- மசாலா இட்லி (Masala Idli Recipe in Tamil)


















கமெண்ட்