ஹங் தாகி(தயிர்)கபாப் (Hung Curd kebab recipe in Tamil)

Pavumidha @cook_13801083
ஹங் தாகி(தயிர்)கபாப் (Hung Curd kebab recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஹங் தாகி தயாரிக்க:::தயிரை காட்டன் துணியில் போட்டு கட்டி அதனை 8 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் பிரிஸரில் வைக்க வேண்டும்.தயிர் தண்ணீராக இல்லாமல் கெட்டியாக இருக்க வேண்டும். கடாயில் கடலை மாவு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வறுத்து கொள்ளவும்
- 2
பின்னர் பாத்திரத்தில் ஹங் தயிர்,வெங்காயம்,வறுத்த கடலை மாவு,உப்பு, மிளகாய் தூள்,மல்லி தூள்,மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து கொள்ளவும்
- 3
பின்னர் மல்லி தழை சேர்த்து கொள்ளவும்.இதனுடன் பிரட் கிரம்ஸ் சேர்த்து கிளறி விடவும்.
- 4
இதனை நன்றாக பிசைந்து கொள்ளவும்.பின்னர் அதனை ஈர கைகளை பயன்படுத்தி உருட்டி கபாப் செய்து தவாவில் வைக்கவும்.
- 5
பின்னர் சிறிது எண்ணெய் ஊற்றி இரு பக்கமும் வேக விடவும்
- 6
சுவையான ஹங் தாகி கபாப் அல்லது தயிர் கபாப் தயார்
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11118929
















கமெண்ட்