உளுந்தங்களி (ulunthangali Recipe in Tamil)

#ஆரோக்கியஉணவு
இடுப்பு எலும்பை வலுப்படுத்தும் உளுந்தங்களி. பூப்படைந்த சமயத்தில் பெண் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய முக்கிய உணவு. கறுப்பு உளுந்தம் பருப்பு, கருப்பட்டி, நல்லெண்ணெய் எல்லாம் சேர்ந்து சுவையையும், ஆரோக்கியத்தையும் தரும்.

சமையல் குறிப்புகள்
- 1
கறுப்பு உளுந்து, பச்சரிசியை நன்கு மாவாகப் பொடித்து, சலித்து ஒரு கப் எடுத்துக் கொள்ளவும்.
- 2
கருப்பட்டி, தண்ணீரை கனமான வாணலியில் சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறவும். கருப்பட்டி நன்கு கரைந்ததும் வடிகட்டவும்.
- 3
வடிகட்டிய கருப்பட்டி தண்ணீரை மறுபடியும் வாணலியில் ஊற்றவும்.
- 4
கருப்பட்டித் தண்ணீர் கொதித்ததும் 1/4 கப் நல்லெண்ணெய் ஊற்றிக் கிளறவும்.
- 5
மாவை அதில் சேர்த்துக் கிளறவும்.
- 6
களி நன்கு வெந்து வாணலியில் ஒட்டாமல் வரும் போது இறக்கவும்.
- 7
ஒரு கிண்ணத்தில் 1/2 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சிறிதளவு களியை அதில் சேர்த்து கிண்ணத்தை சுழற்றவும். களி உருண்டை தயார்.
- 8
மீதமுள்ள களியையும் கிண்ணத்தில் எண்ணெய் ஊற்றி உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்