சாக்லேட் மொய்ஸ்ட் கேக் (Chocolate moist cake recipe in tamil)

சாக்லேட் மொய்ஸ்ட் கேக் (Chocolate moist cake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கேக் மாவு செய்ய 1 கப் மைதா மாவில் 1 டேபிள் ஸ்பூன் மாவை நீக்கிவிட்டு 1டேபிள் ஸ்பூன் சோழ மாவு சேர்க்கவும்
- 2
ஒரு பாதிரத்தை எடுத்துக்கொள்ளவும் அத்துடன் ஒரு ஜல்லடை எடுத்துக்கொண்டு அதில் கேக் மாவு (மைதா + சோழ mavu),கோகோ பவுடர், காபி பவுடர், உப்பு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்து 2 - 3 முறை சலித்து எடுக்கவும்
- 3
ஒரு பாதிரத்தை எடுத்துக்கொள்ளவும் அதில் முட்டை சேர்த்து நாற்றாக அடித்துக்கொள்ளவும் நுரை வந்ததும் அதில் சக்கரை சேர்க்கவும் நாற்றாக அடித்துக்கொள்ளவும்
- 4
அத்துடன் உருகிய வெண்ணை மாற்று 1/2கப் பால் சேர்த்துக்கொள்ளவும் நன்றாக அடித்துக்கொள்ளவும்
- 5
வெனிலா எசென்ஸ் சேர்க்கவும்
- 6
இப்பொழுது காலத்துவைத்த மாவை கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து ஒரு ஸ்பாட்டுல வைத்து போல்ட் செய்யவும் அது ரிப்பன் பதம் வருவதுதான் பதம் ஸ்பாட்டுலவில் மாவு எடுத்து ஊத்தி பாத்தால் அது ரிப்பன் போல் விழும் தேவைப்பட்டால் பால் சேர்த்துக்கொள்ளலாம்
- 7
இப்பொழுது கிரீஸ் செய்து வைத்திருக்கும் கேக் டின் இல் ஊற்றி டேப் செய்யவும் ஏர் குமிழிகள் போவதற்காக
- 8
175டிகிரி ப்ரீஹீட் செய்த ஓவென் இல் 35 முதல் 40 நிமிடம் பேக் பண்ணி எடுக்கவும்
- 9
சக்கரை சிரப் செய்ய : 1/2கப் சக்கரை மற்றும் 1/2 கப் தண்ணிர் சேர்த்து சக்கரை கரையும் வரை காய்ச்சவும்
- 10
அதனை நன்றாக ஆறவிட்டு வைக்கவும்
- 11
சாக்லேட் பட்டர் கிரீம் செய்ய : 1/2கப் பட்டர் ஐ சேர்த்து நன்றாக அடித்துக்கொள்ளவும் அது ஸ்மூத் ஆக வரும்வரை அடிக்கவும்
- 12
3கப் ஐசிங் சுகர் ஐ சிறிது சிறிதாக சேர்த்து அடித்து எடுக்கவும்
- 13
1/4கப் கோகோ பவுடர் மற்றும் 1/4கப் பால், 1டீஸ்பூன் வெனிலா எசென்ஸ் சேர்த்து அடித்து எடுக்கவும்
- 14
அது ஸ்டிப்ப் பீக் வரும் வரை அடித்து எடுக்கவும் பட்டர் கிரீம் ரெடி
- 15
கேக் ஐ நன்றாக ஆறவிட்டு பின் 2 பாகமாக வெட்டி அதில் சக்கரை சிரப் நனைத்து பின் சாக்லேட் பட்டர் கிரீம் ஐசிங் வைத்து மற்றொரு துண்டை வைத்து அதிலும் சக்கரை சிரப் மற்றும் ஐசிங் வைத்து கேக் முழுவதும் சாக்லேட் பட்டர் கிரீம் ஐசிங் வைத்து கவர் செய்யவும் பின் முந்திரி மற்றும் சுகர் பால்ஸ் போட்டு அலங்கரிக்கவும் அதனை பிரிட்ஜ் இல் வைத்து செட் செய்து எடுக்கவும்
- 16
சாக்லேட் கேக் ரெடி
- 17
குறிப்பு : அனைத்தும் அறை வெப்பநிலையில் இருப்பது அவசியம்
Keywords
Similar Recipes
More Recipes






கமெண்ட்