சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)

#eid
அனைவருக்கும் ரமலான் தின நல்வாழ்த்துக்கள்
சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)
#eid
அனைவருக்கும் ரமலான் தின நல்வாழ்த்துக்கள்
சமையல் குறிப்புகள்
- 1
கோழி கறியை நன்கு சுத்தம் செய்து மஞ்சள் தூள் சேர்த்து நன்கு சுத்தம் செய்து வைக்கவும். பாஸ்மதி அரிசியை தண்ணீர் ஊற்றி நன்கு கழுவி சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி ஊற வைத்து கொள்ளவும்.
- 2
குக்கரில் எண்ணெய், நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, சோம்பு, மராட்டி மொக்கு சேர்த்து தாளித்து நீளமாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்.
- 3
பிறகு தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.பிறகு புதினா, கொத்தமல்லி சேர்த்து நன்கு கிளறி விடவும்.தயிர் சேர்த்து நன்கு கலந்து விட்டு வதக்கவும்.
- 4
பிறகு நன்கு கலந்து எண்ணெய் பிரிந்து வந்ததும் கோழி கறியை சேர்த்து நன்கு கிளறி விடவும்.மூடி வைத்து கறி பாதி அளவு வெந்து தண்ணீர் விட்டு வரும் வரும் வரை வேக வைக்கவும்.
- 5
பிறகு 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு, காரம் சரிபார்த்து கொள்ளவும். தண்ணீர் ஒரு கொதி வந்ததும் பாஸ்மதி அரிசியை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி இதில் சேர்த்து கலந்து விடவும். சிறிதளவு கொத்தமல்லி, புதினா இலை சேர்த்து மூடி போட்டு 1 விசில் விட்டு இறக்கவும்.
- 6
விசில் போனதும் மூடியை திறந்து பக்குவமாக கிளறி விட்டு 2 ஸ்பூன் நெய் ஊற்றி கிளறி 5 நிமிடம் மூடி வைத்து பிறகு சூடாக பரிமாறவும். சுவையான சிக்கன் பிரியாணி தயார். நான் இன்று பிரியாணியும் சால்னா மற்றும் சிக்கன் ப்ரை செய்து உள்ளேன். நீங்களும் செய்து பாருங்கள். நன்றி
Similar Recipes
-
-
-
-
-
-
வெஜ் தம் பிரியாணி(veg dum biryani recipe in tamil)
#FCநானும் ரேணுகா அவர்கள் சேர்ந்து பிரியாணி & தால்ச்சா செய்து உள்ளோம். Kavitha Chandran -
-
-
சிக்கன் கமகம பிரியாணி (Flavourful Chicken Biryani recipe in tamil)
#GA4பிரியாணி நாம் அனைவரும் விரும்பி சுவைக்கும் ஒரு உணவாக தற்போதைய நாகரீக காலத்தில் மாறி உள்ளது. அவ்வாறு மணப்பதற்கு பிரியாணியில் சேர்க்கப்படும் ரகசிய பொருட்கள், அளவு போன்றவற்றை இந்த பதிவில் காண்போம். karunamiracle meracil -
-
-
-
-
-
-
-
-
-
ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி (Hydrabad chicken thum biryani recipe in tamil)
#ilovecooking Subhashree Ramkumar -
சிக்கன் பிரியாணி (chicken biryani recipe in Tamil)
#jp கிராமத்தில் காணும் பொங்கலுக்கு அசைவ விருந்து வைப்பது வழக்கம் அது போல நானும் செய்துள்ளேன்.. Muniswari G -
-
Chicken biriyani (Chicken biryani recipe in tamil)
#onepot எல்லோரும் விரும்பி சாப்பிடும் இந்த சிக்கன் பிரியாணி. Azhagammai Ramanathan -
மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
#eid#birthday1நமது குழுவில் உள்ள அனைத்து இஸ்லாமிய சகோதரிகளுக்கும் இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள் இந்த உணவு உங்க எல்லோருடனும் சேர்ந்து கொண்டாடும் வகையில் நான் இங்கு பதிவிடுகிறேன் Sudharani // OS KITCHEN -
-
-
குக்கர் மட்டன் பிரியாணி(cooker mutton dum biryani recipe in tamil)
#FC அவளும் நானும்... @homecookie_270790 Ilakiya arun Ananthi @ Crazy Cookie -
-
-
More Recipes
கமெண்ட்