ஸ்பைசி சிக்கன் பாட்லி

#cookwithfriends
இன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி நண்பர்கள் தின ஸ்பெஷலான சிக்கன் பாட்லி. இது ஒரு புதுமையான சுவையான ஸ்டார்டர் ரெசிபி. வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம்.
ஸ்பைசி சிக்கன் பாட்லி
#cookwithfriends
இன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி நண்பர்கள் தின ஸ்பெஷலான சிக்கன் பாட்லி. இது ஒரு புதுமையான சுவையான ஸ்டார்டர் ரெசிபி. வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் 200 கிராம் போன்லெஸ் சிக்கன் எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
- 2
பின்னர் 1/2 டீஸ்பூன் மிளகாய்தூள், 1/2 டீஸ்பூன் உப்பு, 1 டீஸ்பூன் கார்ன் பவுடர், 1/4 எலுமிச்சை ஜூஸ் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- 3
அடுத்து சூடான எண்ணையில் போட்டு பொரித்து எடுக்கவும்.
- 4
ஒரு கடாயில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
- 5
அடுத்து 1 டீஸ்பூன் இஞ்சி, பூண்டு பொடியாக நறுக்கி ஒரு நிமிடம் வதக்கி, 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து பொறித்து வைத்த சிக்கன் துண்டுகளை போடவும்.
- 6
பின்னர் ஒண்டரை கப் மைதா, 1 டீஸ்பூன் உப்பு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பிசையவும்.மாவில் இருந்து சிறு உருண்டைகளாக பிரித்து எடுக்கவும்.
- 7
இப்போது ஒரு உருண்டை எடுத்து சப்பாத்தி போல் தேய்த்து சிக்கன் மசாலாவை வைக்கவும்.
- 8
சப்பாத்தியை பானை போல் மடித்து வைக்கவும். இதே போல் எல்லா உருண்டைகளையும் அடுக்கி வைக்கவும்.
- 9
கடைசியாக சூடான எண்ணையில் பொறித்து எடுக்கவும். சுவையான ஸ்பைசி சிக்கன் பாட்லி சுவைக்க தயார்.
Keywords
Similar Recipes
More Recipes














கமெண்ட் (2)