பண்ணைக்கீரை தொய்யக்கீரை கீரை மசியல்

#myfirstrecipe உடலுக்கு வலிமை சேர்க்கும் பசியை தூண்டும் நரம்பு சம்பந்தமான பிரச்சனைகளை சரிசெய்யும்
பண்ணைக்கீரை தொய்யக்கீரை கீரை மசியல்
#myfirstrecipe உடலுக்கு வலிமை சேர்க்கும் பசியை தூண்டும் நரம்பு சம்பந்தமான பிரச்சனைகளை சரிசெய்யும்
சமையல் குறிப்புகள்
- 1
கீரைகளை நன்றாக சுத்தம் செய்து தண்ணீரில் இரு முறை அலசி எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம் தாளித்து சின்ன வெங்காயம் தக்காளி வர மிளகாய் பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும் இதனுடன் கீரையையும் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்
- 3
இப்போது வதக்கி வைத்த கலவையை மிக்ஸி ஜாரில் போட்டு லேசாக ஒரு சுத்து விட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 4
வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம் தாளித்து அரைத்த கலவையை அதனுடன் சேர்க்கவும் பின்பு வேகவைத்த பருப்பை அதனுடன் சேர்த்து கொதிக்க வைக்கவும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்
- 5
உடலுக்கு மிகவும் வலிமையான சுவையான கீரை மசியல் தயார்
Keywords
Similar Recipes
More Recipes





கமெண்ட்