கோதுமை டீ டைம் கேக்

#noovenbaking #cake #leftover குக்கரில் கேக் செய்வது எப்படி என்று பார்ப்போம்🎂🎂
கோதுமை டீ டைம் கேக்
#noovenbaking #cake #leftover குக்கரில் கேக் செய்வது எப்படி என்று பார்ப்போம்🎂🎂
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் மூன்று முட்டைகளை போட்டு நன்றாக நுரை வரும்படி கலக்கவும் இந்த கலவையில் பொடித்த சர்க்கரையை சேர்த்து கலக்கவும் இதனுடன் எண்ணையை சேர்த்து மேலும் கலக்கவும்
- 2
இதே நேரத்தில் குக்கரை விசில் போடாமல் 15 நிமிடங்கள் பிரீ ஹிட் செய்ய வேண்டும்
- 3
இப்போது ஒரு சல்லடையில் கோதுமை மாவு பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா ஆகியவற்றை சேர்த்து நன்கு சலித்துக்கொள்ளவும்
- 4
சலித்த கலவையை ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கும் முட்டை சர்க்கரை ஆயில் சேர்ந்த கலவையுடன் சிறிது சிறிதாக கொட்டி கிளறவும் இப்போது ஒரு கப் பாலை சிறிது சிறிதாக சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கொண்டு வரவும்
- 5
கேக் செய்யும் டின்னில் கேக் ஒட்டாமல் வர வெண்ணையை தடவி ஒரு ஸ்பூன் கோதுமை மாவை தூவி விடவும் இப்போது தயார் செய்து வைத்திருக்கும் கேக் பேட்டரை அதில் ஊற்றவும் கேக் டின்னை மூன்று முறை நன்றாக தட்டிக் கொள்ளவும் காற்று குமிழ்கள் இருந்தால் வெளியேறும்
- 6
கேக்கின் மேல் தூவ பாதாம் மற்றும் பிஸ்தா பருப்புகளை நன்றாக துருவிக் கொள்ளவும் இதனை கேக்கின் மேல் தூவி விடவும்
- 7
கேக் டின்னை பிரீ ஹிட் செய்து வைத்திருக்கும் குக்கரில் ஒரு ஸ்டாண்டை வைத்து வைக்கவும் 45 நிமிடங்கள் கழித்து குக்கரை திறந்து ரூபி கால் குத்திப் பார்க்கவும் டூத் பிக்கில் ஒட்டவில்லை என்றால் கேக் ரெடியாகி விட்டது என்று அர்த்தம் ஒட்டி இருந்தால் மீண்டும் ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் வேக வைக்கவும் சுவையான கோதுமை டீ டைம் கேக் தயார்
Keywords
Similar Recipes
More Recipes












கமெண்ட் (4)