மொரு மொரு ஸ்வீட் கான் (Sweet corn fry recipe in tamil)

Poongothai N @cook_25708696
மொரு மொரு ஸ்வீட் கான் (Sweet corn fry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஸ்வீட் கார்னை உதிர்த்துக்கொள்ளவும் நான் குழந்தைகளுக்கு பிடிக்கும் என்பதற்காக அதில் பல் குத்தும் குச்சியை குத்தி 4-5 சோளத்தை ஒன்றாக சேர்த்து எடுத்துள்ளேன்
- 2
படத்தில் காட்டியுள்ளது போல முழு சோளத்தையும் நன்றாக உதிர்த்துக் கொள்ளவும்
- 3
ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் விட்டு இரண்டு நிமிடங்களுக்கு இந்த உதிர்த்த சோளத்தை வேக வைக்கவும். பல் குத்தும் குச்சி உடனேயே வேக வைக்கலாம்.
- 4
2 நிமிடங்கள் கழித்து தண்ணீரை விட்டு எடுத்து பின்பு அதனுடன் சோள மாவு,அரிசி மாவு,உப்பு சேர்த்து பிசறி வைக்கவும்
- 5
பின்பு இதை நல்ல சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்
- 6
பொரித்து எடுத்த சோளத்துடன் சீரகத்தூள் மிளகுத்தூள், சாட் மசாலா உப்பு போன்றவற்றை கலந்து பரிமாறும் பொழுது அதனுடன் அரை எலுமிச்சம்பழம் பிழிந்து பரிமாறலாம்.
- 7
சுவையான மொரு மொரு ஸ்வீட் கான் ரெடி
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13426732















கமெண்ட் (2)