ஆலு பராத்தா

#GA4
இன்று ஆலு பராத்தா எப்படி செய்வது னு பார்க்கலாம். இதற்கு தனியா சைட் டிஷ் தேவை இல்லை.. செய்முறை விளக்கத்தை தெரிஞ்சிக்கலாமா...
ஆலு பராத்தா
#GA4
இன்று ஆலு பராத்தா எப்படி செய்வது னு பார்க்கலாம். இதற்கு தனியா சைட் டிஷ் தேவை இல்லை.. செய்முறை விளக்கத்தை தெரிஞ்சிக்கலாமா...
சமையல் குறிப்புகள்
- 1
1 கப் கோதுமை மாவில் 1/2 சிட்டிகை உப்பு, நெய் 1 ஸ்பூன் சேர்த்து சிறிது நீர் விட்டு பிசைந்து கொள்ளவும்.
- 2
2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்கு மிருதுவாக இருக்கும் படி பிசைந்து 1/2 மணி நேரம் மூடி வைக்கவும்.
- 3
உருளைக்கிழங்கை வேகவைத்து பின் தோலுரித்து நன்கு மசித்துக் கொள்ளவும்.
- 4
மஞ்சள் தூள், காரப்பொடி, உப்பு, மல்லித்தூள், கரம் மசாலா மேற்குறிப்பிட்ட அளவுகளில் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்குடன் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
- 5
தண்ணீர் சேர்க்காமல் பிசைந்து கொள்ளவும்.
- 6
மசாலா இப்போது தயாராக உள்ளது. மாவும் தயார் நிலையில் உள்ளது.
- 7
மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி அப்பளம் போடுவது போல போட்டு அதனுள் தயார் நிலையில் உள்ள மசாலா வை வைத்து கொள்ளவும்.
- 8
கொழுக்கட்டை போல மீண்டும் உருட்டி அப்பளம் போல மீண்டும் போட்டு தோசைக்கல்லில் போட்டு எடுக்கவும்.
- 9
சுவையான ஆரோக்கியமான ஆலு பராத்தா இப்போது தயார்.
Similar Recipes
More Recipes






கமெண்ட்