எஸன்ஸ் மற்றும் கலர் சேர்க்காத பிஸ்தா ஐஸ்கிரீம்

#cookwithmilk
இயற்கை முறையில் எந்தவித ரசாயனங்களும் சேர்க்காத பிஸ்தா ஐஸ்கிரீமின் செய்முறையை பார்க்கலாம்
எஸன்ஸ் மற்றும் கலர் சேர்க்காத பிஸ்தா ஐஸ்கிரீம்
#cookwithmilk
இயற்கை முறையில் எந்தவித ரசாயனங்களும் சேர்க்காத பிஸ்தா ஐஸ்கிரீமின் செய்முறையை பார்க்கலாம்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பிஸ்தாவை 4 முதல் 5 மணி நேரங்கள் நன்றாக கழுவி ஊறவைக்கவும் வைக்கவும்
- 2
நன்றாக ஊறிய பிறகு அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைக்கவும் தேவைப்பட்டால் பால் சேர்த்து அரைக்கவும். ஐந்து பிஸ்தாவை தனியாக எடுத்து சிறியதாக வெட்டி வைத்துக் கொள்ளவும்
- 3
பிறகு ஒரு பெரிய பாத்திரத்தில் ஒரு கப் க்ரீம் சேர்த்து அதை நன்றாக அடிக்கவும்
- 4
பிறகு அதனுடன் கால் கப் அளவு கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து அதையும் நன்றாக இரண்டு நிமிடங்கள் அடிக்கவும்
- 5
பிறகு அதனுடன் நாம் தயார் செய்து வைத்திருக்கும் பிஸ்தா கலவையை சேர்க்கவும்
- 6
பிஸ்தா கலவையை சேர்த்து நன்றாக இரண்டு நிமிடங்கள் அடித்த பிறகு சிறிது சிறிதாக வெட்டி வைத்திருக்கும் பிஸ்தாவையும் அதனுடன் சேர்க்கவும்
- 7
இரண்டு மூன்று நிமிடங்கள் நன்றாக அடித்த பிறகு நம்முடைய பிஸ்தா ஐஸ்கிரீம் தயார் இதை காற்று புகாத ஒரு டப்பாவில் போட்டு ப்ரீசரில் 4 முதல் 5 மணி நேரம் வைக்கவும்
- 8
எந்தவித எஸ்என்ஸு கலரும் சேர்க்காத நம்முடைய இயற்கையான பிஸ்தா ஐஸ்கிரீம் தயார். அலங்கரிப்பதற்காக சாக்லேட் ஊற்றி பரிமாறி உள்ளேன். தேவைப்பட்டால் பிஸ்தா காலை சிறிது சிறிதாக நறுக்கி மேலே தூவி பரிமாறலாம்
Top Search in
Similar Recipes
More Recipes

















கமெண்ட் (2)