சேனைக்கிழங்கு/கருணைக்கிழங்கு தவா ரோஸ்ட்

Manjula Sivakumar
Manjula Sivakumar @Manjupkt

சேனைக்கிழங்கு/கருணைக்கிழங்கு தவா ரோஸ்ட்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1/4கிலோ சேனைக்கிழங்கு
  2. 1ஸ்பூன் மஞ்சள் தூள்
  3. 11/2ஸ்பூன் மிளகாய் தூள்
  4. 2ஸ்பூன் மல்லித்தூள்
  5. 1ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  6. 4-6ஸ்பூன் புளிக்கரைசல்
  7. உப்பு
  8. எண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    சேனைக்கிழங்கை சற்று தடிமனாக வெட்டி வைக்கவும். (வேக வைக்க கூடாது). ஒரு கிண்ணத்தில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். பின்னர் இஞ்சி பூண்டு விழுது, புளிக்கரைசல் சேர்த்து திக்காக கரைத்து கொள்ளவும். புளிக்கரைசல் தேவைக்கு ஏற்ப சேர்க்கலாம்.

  2. 2

    பின்னர் மசாலாவை வெட்டி வைத்துள்ள கிழங்கில் தடவி 30நிமிடம் வரை ஊற விடவும். பின்னர் தவாவில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கிழங்கை தனித்தனியாக வைத்து ஒரு புறம் 5லிருந்து 7நிமிடம் வேக விட்டு பின் திருப்பி போட்டு மறு பக்கமும் 7நிமிடம் வேக வைத்து எடுக்கவும். மிதமான தீயில் வேக வைக்கவும்.

  3. 3

    இது தயிர் சாதம், ரசம் சாதம், சாம்பார் சாதம் உடன் பரிமாறவும். இதே மசாலாவை வைத்து வாழைக்காய், உருளைக்கிழங்கு, வஞ்சிரம் மீன் ஆகியவற்றையும் ரோஸ்ட் செய்யலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Manjula Sivakumar
அன்று

Similar Recipes