கோதுமை வெல்லம் பான் கேக் (Kothumai vellam pan cake recipe in tamil)

வெல்லம். இன்று பலரும் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக பனை வெள்ளத்திற்கு மாறி உள்ளனர். நான் உள்பட... வெள்ளை சர்க்கரை உடலுக்கு பல தீங்குகள் விளைவிக்கும். சர்க்கரை நோய், செரிமான கோளாறுகள்... அதனால் வெள்ளை சர்க்கரை பயன்படுத்தும் இடத்தில் பனை வெல்லம் சேர்க்கலாம். டீ, காபி, கேக், இனிப்பு வகைகள்... பனை வெல்லம் உடலுக்கு பல நன்மைகளை வழங்கும். உடல் சூடு, செரிமான கோளாறுகளை சரி செய்யும். இத்தனை நன்மை பயக்கும் பனை வெல்லத்தை பயன் படுத்தி அனைவரும் விரும்பும் வகையில் இனிப்பாக சூடாக பான் கேக் செய்யலாம்.
#GA4 #week15

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு அடி கனமான பாத்திரத்தில் பனை வெல்லத்தை தண்ணீர் சேர்த்து வெல்லம் கரையும் வரை சூடு செய்ய வேண்டும்.
- 2
அவற்றை சிறிது நேரம் ஆற வைக்க வேண்டும்.
- 3
மற்றொரு பாத்திரத்தில் கோதுமை மாவு, ஏலக்காய் பொடி மற்றும் பேக்கிங் சோடா சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 4
வெல்லம் தண்ணீர் ஆறியவுடன் கோதுமை மாவுடன் சேர்த்து அரிசி மாவு பதத்திற்கு கலக்க வேண்டும்.
- 5
அடுப்பில் தோசை கல்லை சுட வைத்து மாவை அதில் ஊற்றி சுற்றி எண்ணெய் ஊற்ற வேண்டும்.
- 6
வெந்தவுடன் திருப்பி போட்டு மறுபக்கமும் வேக வைத்து எடுத்தால் சுவையான கோதுமை வெல்லம் பான் கேக் ரெடி!
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்