ஹெல்த்தி கோதுமை நட்ஸ் கேக் (Kothumai nuts cake recipe in tamil)

Azhagammai Ramanathan
Azhagammai Ramanathan @ohmysamayal

#Grand1 #GA4 #jaggery
கிறிஸ்துமஸ் கொண்டாடஇருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.கோதுமை மாவு, வெல்லம் சேர்த்து செய்த இந்த கேக் மிகவும் பிரமாதமாக இருந்தது சாஃப்டாக இருந்தது.

ஹெல்த்தி கோதுமை நட்ஸ் கேக் (Kothumai nuts cake recipe in tamil)

#Grand1 #GA4 #jaggery
கிறிஸ்துமஸ் கொண்டாடஇருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.கோதுமை மாவு, வெல்லம் சேர்த்து செய்த இந்த கேக் மிகவும் பிரமாதமாக இருந்தது சாஃப்டாக இருந்தது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
6 பேர்
  1. 1 கப் கோதுமை மாவு
  2. 1/2கப் வெல்லம்
  3. 3/4 கப் தண்ணீர்+3 டேபிள் ஸ்பூன்
  4. 1 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  5. 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடா
  6. 1/4 கப் எண்ணெய்
  7. 1/2 டீஸ்பூன் வெனிலா எசன்ஸ்
  8. 1/2 டீஸ்பூன் நட்மெக் பவுடர்
  9. 1/2 டீஸ்பூன்சின்னமொன் பவுடர்
  10. 1 டேபிள் ஸ்பூன் முந்திரி,பாதாம்
  11. 8கறுப்பு திராட்சை, வெள்ளை திராட்சை

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    தேவையானவற்றை தயாராக எடுத்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வெல்லம் சேர்த்து அடுப்பில் வைத்து கரைய விடவும்.

  2. 2

    வெல்லக் கரைசல் கரைந்ததும் வடிகட்டி வைக்கவும்.திராட்சை, முந்திரி, பாதாம் சேர்த்து அரை மணி நேரம் ஊற விடவும்.

  3. 3

    இப்போது மாவு பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடாவை சலித்து எடுத்துக் கொள்ளவும். குக்கரில் மண் நிரப்பி மூடி போட்டு 10 நிமிடம் மிதமான தீயில் ப்ரீஹீட் பண்ணவும்.

  4. 4

    ஒரு பவுலில் வெல்லக் கரைசல் சேர்த்து பட்டைத்தூள்,நட்மக் பவுடர், வெண்ணிலா எசன்ஸ் சேர்க்கவும்.

  5. 5

    அதில் கோதுமை மாவை சிறிது சிறிதாக கலந்து கடைசியாக எண்ணெய் சேர்த்து விஸ்கி கொண்டு கிளறவும். கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

  6. 6

    மாவு கலவை சற்று தளர்வாக இருக்க வேண்டும். இப்போது பேனில் சிறிது ஆயில் சேர்த்து கிரீஸ் பண்ணவும்.

  7. 7

    பிறகு கலவையை சேர்த்து நன்றாக இரண்டு முறை தட்டிக் கொள்ளவும்.

  8. 8

    அதன் மேல் சிறிது பாதாம் முந்திரி துருவலை சேர்க்கவும். குக்கரில் சேர்த்து 35 நிமிடம் பேக் பண்ணி எடுக்கவும். பத்து நிமிடம் ஆறியதும் அன்மோல் செய்யலாம்.

  9. 9

    இப்போது சுவையான அட்டகாசமான கிறிஸ்துமஸ் ஹெல்த்தி கேக் சாப்பிட தயார். நீங்களும் செய்து பார்த்து சுவைத்து மகிழுங்கள்....

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Azhagammai Ramanathan
அன்று

Similar Recipes