சென்னா மசாலா (Channa masala recipe in tamil)

#grand2
கொண்டக்கடலை மிகவும் சத்துள்ள பொருட்களில் ஒன்று அதை வைத்து நாம் கிரேவி மசாலாக்கள் செய்யும் போது அதன் சுவை அதிகமாக இருக்கும் இந்த மசாலா கிரேவி சப்பாத்தி பூரி இட்லி தோசை ஆகியவற்றிற்கு தொட்டுக்கொள்ள மிகவும் உகந்ததாக இருக்கும்.

சமையல் குறிப்புகள்
- 1
சென்னாவை மூன்று முறை நன்றாகக் கழுவி குறைந்தது 7 மணி நேரத்துக்காவது ஊற வைக்க வேண்டும் பின்பு தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரில் வைத்து ஐந்து விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளவும்
- 2
தக்காளி வெங்காயம் பச்சை மிளகாய் பூண்டு இஞ்சி ஆகியவற்றை கழுவி நறுக்கி மிக்சி ஜாரில் போட்டு எல்லாவற்றையும் சேர்த்து ஒரே பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் 2 குழிக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி இந்த பேஸ்டை அதில் சேர்த்து 2 நிமிடம் நன்றாக வதக்கவும்.
- 3
பின்னர் அதில் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து மசாலாவிற்கு மட்டும் தேவையான உப்பையும் சேர்த்து ஒரு நிமிடம் நன்றாக வதக்கவும் மசாலாக்கள் வழங்கி உடன் வேக வைத்த சென்னா அவை தண்ணீரை வடிக்காமல் கடாயில் அப்படியே சேர்க்க வேண்டும்.
- 4
3 முதல் 5 நிமிடங்கள் வரை அடுப்பில் சிறிய தீயில் வைத்து நன்றாக கிரேவி பதம் வந்தவுடன் இறக்கி விடவும் கொத்தமல்லித்தழை தூவி அலங்கரித்து கொள்ளவும்.
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்