நூடுல்ஸ் பொட்டல பரோட்டா (Noodles Pottala Parotta recipe in tamil)

மாதம்தோறும் வாங்கும் மளிகை பொருள்களில் நூடுல்ஸ் வாங்காமல் இருந்ததே இல்லை. இந்த கொரோன காலத்திலும் என் வீட்டில் கிச்சன் அறையில் நூடுல்ஸ் பாக்கெட் தான் அதிகமாக அடுக்கி வைத்து இருந்தேன். பொதுவாக நூடுல்சை இரண்டு நிமிடத்தில் செய்து முடித்து விடுவார்கள், அப்படி இல்லாமல் இந்த பொட்டல பரோட்டாவில் நூடுல்சை ஸ்டாப் செய்து ஒரு வித்தியாசமான ரெசிபியை கீழே பதிவு செய்துள்ளேன். #noodles
நூடுல்ஸ் பொட்டல பரோட்டா (Noodles Pottala Parotta recipe in tamil)
மாதம்தோறும் வாங்கும் மளிகை பொருள்களில் நூடுல்ஸ் வாங்காமல் இருந்ததே இல்லை. இந்த கொரோன காலத்திலும் என் வீட்டில் கிச்சன் அறையில் நூடுல்ஸ் பாக்கெட் தான் அதிகமாக அடுக்கி வைத்து இருந்தேன். பொதுவாக நூடுல்சை இரண்டு நிமிடத்தில் செய்து முடித்து விடுவார்கள், அப்படி இல்லாமல் இந்த பொட்டல பரோட்டாவில் நூடுல்சை ஸ்டாப் செய்து ஒரு வித்தியாசமான ரெசிபியை கீழே பதிவு செய்துள்ளேன். #noodles
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் 1 கப் மைதா மாவை சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய், தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
- 2
அதில் தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும் பிசைந்த மாவை ஐந்து நிமிடம் முதல் 10 நிமிடம் வரை மூடி வைக்கவும்.
- 3
ஒரு வாணலில் 2 கப் தண்ணீர் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து அதில் நூடுல்ஸ் பாக்கெட் ஒன்றை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும். இரண்டு நிமிடத்திற்கு பிறகு தண்ணீர் இருந்தால் அதை வடிகட்டிவிட்டு நூடுல்சை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 4
இப்பொழுது ஒரு வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணை, 1/4 கப் பொடிதாக நறுக்கிய வெங்காயம், 1/2 தக்காளி, 1 பச்சை மிளகாய் மற்றும் நூடுல்ஸ் மசாலா சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 5
பின்னர் அதில் வேக வைத்திருக்கும் நூடுல்ஸை சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
- 6
பிசைந்து வைத்த மாவில் இருந்து ஒரு சிறிய பந்து அளவுக்கு மாவை எடுத்துக் கொள்ளவும். அதை வட்டமாக தேய்த்துக் கொள்ளவும்.
- 7
தேய்த்து வைத்த பரோட்டாவில் 2 கரண்டி அளவுக்கு செய்து வைத்துள்ள நூடுல்சை வைத்து நன்றாக பரப்பி விடவும்.
- 8
இதன் மேல் தேய்த்து வைத்த இன்னொரு பரோட்டாவை மேலே வைக்கவும்.
- 9
சுற்றி இருக்கும் ஓரங்கள் எல்லாம் நன்றாக அழுத்தி விடவும். இதற்கு விரல்கள் அல்லது போர்க் ஸ்பூன் பயன்படுத்தலாம்.
- 10
ஒரு தோசைக்கல்லில் சூடேறிய பிறகு செய்து வைத்திருக்கும் பரோட்டாவை இரண்டு பக்கங்களையும் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 11
ஒரு வாழை இலையை அடுப்பில் காட்டி சுட்டுக் கொள்ளவும்.
- 12
சுட்டு வாழை இலையின் மேல் செய்து வைத்திருக்கும் நூடுல்ஸ் பரோட்டாவை வைக்கவும். இதன் மேல் 2 கரண்டி நூடுல்சை சேர்க்கவும்.
- 13
பின்னர் இதன் மேல் ஆம்பள இதை வைத்துக் கொள்ளவும். அதன் மேல் தேவையான அளவு சால்னா அவை சேர்த்துக் கொள்ளவும்.
- 14
இப்பொழுது சால்னா மேல் வெங்காயம், தக்காளியை மற்றும் கொத்தமல்லி சேர்த்துக்கொள்ளவும். இதன் மேல் மறுபடியும் 2 கரண்டி நூடுல்ஸ் வைக்கவும். அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சைமிளகாய் சேர்க்கவும்.
- 15
இலையை நன்றாக மழை பொட்டலம் போல் மடித்து நூல் வைத்து கட்டிக் கொள்ளவும்.
- 16
ஒரு கடாயில் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து அதில் ஒரு ஸ்டண்ட் அல்லது தட்டு வைத்துக் கொள்ளவும்.
- 17
அந்தத் தட்டின் மேல் செய்து வைத்திருக்கும் பொட்டலத்தை வைத்துக்கொள்ளவும். பின்னர் இதை ஒரு தட்டு போட்டு மூடி 15 நிமிடம் தண்ணீரில் கொதிக்க விடவும்.
- 18
15 நிமிடம் கழித்து பொட்டலத்தை பிரித்தால் சுவையான நூடுல்ஸ் பொட்டல பரோட்டா ரெடி
Keywords
Similar Recipes
More Recipes









































கமெண்ட் (4)