உருளைக்கிழங்கு குருமா

உருளைக்கிழங்கு குருமா
சமையல் குறிப்புகள்
- 1
தக்காளி வெங்காயம் உருளைக்கிழங்கு ஆகியவற்றை நறுக்கி எடுத்துக் கொள்ளவும் பின்பு தேங்காயை திருகி மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் பூண்டு இஞ்சி ஆகியவற்றையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
- 2
ஒரு கடாயில் ஒரு குழிக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி மசாலா சாமான்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும் அதனுடன் தக்காளி வெங்காயம் நறுக்கிய உருளைக்கிழங்கு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக வதக்கவும்
- 3
அனைத்தும் நன்றாக வதங்கியவுடன் ஒரு ஸ்பூன் தனி மிளகாய் தூள் ஒரு ஸ்பூன் மல்லித் தூள் கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் ஆகியவற்றை சேர்த்து பாதி அளவு உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும்
- 4
அனைத்தும் வெந்தவுடன் அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து நன்றாக கிளறி தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்கள் சிம்மில் வைக்கவும் பின்னர் கொத்தமல்லி தழை அல்லது கஸ்தூரி மேத்தி சேர்த்து இறக்கிவிடவும்
Similar Recipes
More Recipes















கமெண்ட்