சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் பிரிஞ்சி இலை சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
- 2
இப்பொழுது கேரட் பீன்ஸ் உருளைக்கிழங்கு இவற்றைச் சேர்த்து நன்கு வதக்கி உப்பு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் கொத்தமல்லித்தூள் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து ஒரு விசில் விட்டு வேக வைக்கவும்.
- 3
தேங்காய் சோம்பு பொட்டுக்கடலை முந்திரி இவற்றை அரைத்து காயோடு சேர்த்து கொதிக்கவைத்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
- 4
கொத்தமல்லி இலை தூவி பரிமாற வெஜிடபிள் குருமா ரெடி.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14736722














கமெண்ட் (4)