முட்டை கொத்து சப்பாத்தி

Suresh Sharmila @sharmilasuresh
#everyday3
காலையில் செய்த சப்பாத்தியில் மீதமான சப்பாத்தியை இரவு உணவாக பயன்படுத்தலாம்,முட்டை சேர்த்து கொத்து சப்பாத்தியாக சாப்பிடலாம்.
முட்டை கொத்து சப்பாத்தி
#everyday3
காலையில் செய்த சப்பாத்தியில் மீதமான சப்பாத்தியை இரவு உணவாக பயன்படுத்தலாம்,முட்டை சேர்த்து கொத்து சப்பாத்தியாக சாப்பிடலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.பச்சை மிளகாய் சேர்க்கவும்.
- 2
பின்பு,தக்காளியை பொடி பொடியாக நறுக்கி சேர்த்து,இஞ்சி,பூண்டு விழுது,மஞ்சள்த்தூள் சேர்க்கவும்.
- 3
1 ஸ்பூன் மிளகாய்த்தூள்,கரம் மசாலா தூள்,சீரகத்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 4
பின்பு,3 முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக வதக்கவும்.
- 5
மீதமான சப்பாத்தியை சிறு துண்டுகளாக வெட்டி,முட்டை மசாலாவுடன் சேர்த்து,கொத்தமல்லி தழை சேர்த்து வதக்கவும்.
- 6
சுவையான முட்டை கொத்து சப்பாத்தி ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14863380



















கமெண்ட் (4)