மாவுபிசையாமல் எப்படி சப்பாத்தி செய்வது மற்றும் சென்னா மசாலா

மாவுபிசையாமல் எப்படி சப்பாத்தி செய்வது மற்றும் சென்னா மசாலா
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு மைதா மாவு சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து நன்கு தோசைமாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும், பின் தோசைக் கல்லை நன்கு காய வைத்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து இரண்டு கரண்டி அளவு மாவை எடுத்து கல்லில் ஊற்றி கொள்ளவும்
- 2
பின் அது இரண்டு பக்கமும் வேக ஆரம்பிக்கும் போது ஒரு சாஃப்டான துணி எடுத்து மெதுவாக அழுத்தி விடவும் ஓரங்களில்
- 3
எனது சப்பாத்தி பதத்திற்கு இரண்டு பக்கமும் தெரிய ஆரம்பிக்கும் போது சிறிதளவு எண்ணெய் ஊற்றி மெதுவாக தோசை கரண்டி வைத்து தடவ வேண்டும், சப்பாத்தி ஈசியாக ரெடியாகிவிட்டது
- 4
அடுத்ததாக சென்னா மசாலா செய்வதற்கு நாம் நம் வெள்ளை கொண்டைக்கடலையை 4 முதல் 5 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும், பின் அதை ஒரு சின்ன குக்கரில் சேர்த்து இரண்டு விசில் வரும்வரை வேக வைத்துக் கொள்ள வேண்டும்
- 5
தேங்காவை ஒரு மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும், பின் ஒரு கனமான கடாயில் எண்ணெய் சேர்த்து
- 6
மசாலாக்கள் எல்லாத்தையும் போட்டு வதக்கிய பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும், அதனுடன் பச்சைமிளகாய் தக்காளி மற்றும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்கு கிளற வேண்டும்
- 7
தக்காளி நன்கு வதங்கியதும் குழம்பு மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், கஷ்மிரி சில்லி பவுடர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறவும், பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கிளறிக் கொள்ளவும், பின் இந்த கலவையுடன் வேக வைத்திருக்கும் கொண்டைக்கடலை சேர்த்து நன்கு கிளறிக் கொள்ளவும் ஒரு பத்து நிமிடத்திற்குள் நன்கு கொதி வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கி விடவும்
- 8
சுவையான சப்பாத்தி மற்றும் சன்னா மசாலா தயார், ரொம்பவே சுலபமாக மாவுபிசையாமல் எப்படி சப்பாத்தி செய்வது என்று நாம் பார்த்தோம், நீங்கள் மறக்காமல் உங்கள் இல்லத்தில் இந்த ரெசிபியை முயற்சி செய்து பார்த்து எப்படி இருந்தது என்று எனக்கு கமெண்ட் செய்யவும், நன்றி.
Keywords
Similar Recipes
More Recipes


























கமெண்ட்