சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, தக்காளி அரிந்து மிக்ஸியில் போட்டு நைசாக அரைக்கவும்.
- 2
பட்டானி யை இரவு ஊற வைக்கவும். பிறகு அதனுடன் 1 உருளைக்கிழங்கு அரிந்து போட்டு குக்கரில் 3 விசில் வரும் வரை வேக வைக்கவும். ஒரு வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும் கறிவேப்பிலை போட்டு மிக்ஸியில் அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து 6 நிமிடம் கொதிக்கவிடவும். மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள், கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும். உப்பு போடவும். நன்றாக கொதிக்கவிடவும்.
- 3
வேக வைத்த பட்டாணி, உருளைக்கிழங்கு நன்றாக மசித்து போடவும். நன்றாக கொதிக்கவிடவும். சுவையான வண்டி கடை பட்டாணி மாசலா ரெடி. அதனுடன் பொடியாகநறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14896465












கமெண்ட்