சமோசா ரோல்
#vattaram Kanchipuram, Chengalpattu
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும். அத்துடன் நறுக்கிய வெங்காயம், மஞ்சள்தூள், மிளகாய்தூள், கரம் மசாலா, உப்பு சேர்க்கவும்.
- 2
பிறகு நறுக்கி வைத்த கொத்தமல்லிதழை சேர்த்து நன்கு பிசைந்து உருண்டையாக பிடிக்கவும்.
- 3
கோதுமைமாவு, உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து உருண்டை பிடிக்கவும்.
- 4
சப்பாத்திக்கு இழுப்பது போல் நைசாக இழுக்கவும். அதை இரண்டாக வெட்டி அதில் ஒன்றில் மசாலா வைத்து மாவுடன் ரோல் செய்து கடைசியில் தண்ணீர் தடவி ஒட்டவும்.
- 5
ஒரு கிண்ணத்தில் 3ஸ்பூன் மைதா மாவு எடுத்து கொஞ்சம் தண்ணீர் விட்டு கெட்டியாக கரைத்து கொள்ளவும்.
- 6
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேறியதும் அந்த ரோலை கலந்து வைத்த மாவில் இருபுறமும் முக்கிய பின் எண்ணெயில் போட்டு பொரித்து நன்றாக வேக வைத்து எடுக்கவும்.
- 7
சுவையான ஈஸியான சமோசா ரோல் ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes





















கமெண்ட்