சுவையான பொரி சித்ரான்னம்

வித்யாசமான சுவையில் பொரி சித்ரான்னம் செய்யும் முறை. காலை சிற்றுண்டி அல்லது தேனீர் அருந்தும் சமையம் பரிமாற உகந்தது. ஈசி மற்றும் டேஸ்ட்டி.
சுவையான பொரி சித்ரான்னம்
வித்யாசமான சுவையில் பொரி சித்ரான்னம் செய்யும் முறை. காலை சிற்றுண்டி அல்லது தேனீர் அருந்தும் சமையம் பரிமாற உகந்தது. ஈசி மற்றும் டேஸ்ட்டி.
சமையல் குறிப்புகள்
- 1
2 லிட்டர் பொரி நன்றாக சுத்தம் செய்து, தண்ணிரில் 1 நிமிடம் நனைத்து, பில்டர் செய்து தனியாக வைத்து கொள்ளவும்.
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து வதக்கவும். கடுகு பொரிந்ததும் வேர்க்கடலை கடலைப்பருப்பு சேர்த்து பொண்நிறமாக வதக்கவும்.
- 3
பிறகு நறுக்கி வைத்த வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 4
பிறகு மஞ்சள் தூள் மற்றும் 1/2 டீஸ்பூன் உப்பு சேர்த்து, துருவிய கேரட் மற்றும் தேங்காயை சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 5
பிறகு கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி சேர்த்து வதக்கி, நனைத்து வைத்த பொரியை சேர்த்து நன்றாக வதக்கி 1 நிமிடம் மூடி போட்டு வேக விடவும்.
- 6
பிறகு பிழிந்து வைத்த எலுமிச்சம் சாறு சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 7
சுவையான பொரி சித்ரான்னம் பரிமாற ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes





















கமெண்ட்