சமையல் குறிப்புகள்
- 1
இட்லி அரிசியை நன்கு தண்ணீர் விட்டு அலசி, அது மூழ்கிற அளவுக்கு தண்ணீர் விட்டு 4மணிநேரம் ஊற விடவும். உளுத்தம்பருப்புடன் வெந்தயம் சேர்த்து தண்ணீர் விட்டு 4மணிநேரம் ஊறவைக்கவும். தனித்தனியாக ஊறவைக்கவும்.
- 2
பின்னர் கிரைண்டரில் முதலில் உளுந்தை தண்ணீர் இல்லாமல் போட்டு அரைத்து கொள்ளவும். தேவையான அளவு தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும்.
- 3
பின் அதே கிரைண்டரில் அரிசி மாவை, தண்ணீர் இல்லாமல் போட்டு அரைத்து கொள்ளவும். தேவையான அளவு தண்ணீர் விட்டு மைய அரைத்து கொள்ளவும்.
- 4
ஏற்கனவே அரைத்து வைத்த உளுந்து மாவையும், அரிசி மாவையும் ஒன்றாக கலந்து,உப்பு சேர்த்து 8 மணிநேரம் புளிக்க வைக்கவும். பின்னர் இட்லி தட்டில், இட்லி ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுக்கவும்
- 5
அருமையான இட்லி ரெடி. இதனை சாம்பாருடன் சேர்த்து பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14923769














கமெண்ட்