பருப்பு மிளகு ரசம்

#refresh1
பொதுவாக ரசம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நல்ல உணவாகும் ரசம் சேர்த்து சாப்பிட்டால் செரிமானம் சீராக இருக்கும்.... ரசத்தை மேலும் சத்தான உணவாக மாற்ற அதில் பருப்பு தண்ணீரையும் கலந்து ரசம் வைக்கலாம்....
பருப்பு மிளகு ரசம்
#refresh1
பொதுவாக ரசம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நல்ல உணவாகும் ரசம் சேர்த்து சாப்பிட்டால் செரிமானம் சீராக இருக்கும்.... ரசத்தை மேலும் சத்தான உணவாக மாற்ற அதில் பருப்பு தண்ணீரையும் கலந்து ரசம் வைக்கலாம்....
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் புளியை தண்ணீரில் ஊறவைத்து கரைத்துக் கொள்ள வேண்டும்
- 2
பிறகு அடுப்பை குறைவான தீயில் வைத்து ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் மிளகு சேர்த்து மிளகு நன்றாக பொரியும் வரை வறுத்தெடுத்து தனியே ஒரு பாத்திரத்தில் வைத்து விடலாம்
- 3
பிறகு அதே கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் சீரகம் சேர்த்து சீரகத்தின் கலர் மாறி அதன் வாசனை வரும் வரை வறுத்து எடுக்க வேண்டும் அடுப்பை குறைவான தீயில் வைக்க வேண்டும்
- 4
நாம் வறுத்துள்ள மிளகு மற்றும் சீரகத்தை ஒரு மிக்ஸி ஜாரில் மாற்றி பொடியாக்கிக் கொள்ள வேண்டும் இப்போது ரசத்திற்கு தேவையான ரசப்பொடி தயார்
- 5
இப்போது நாம் பருப்பு தண்ணீர் தயாரிக்க வேண்டும் அதற்கு 50 கிராம் துவரம் பருப்பை தண்ணீரில் நன்றாக அலசி விட்டு அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவேண்டும் பருப்பு நன்றாக வெந்து தண்ணீரில் கரைந்து விடும் அளவிற்கு வேக வைக்க வேண்டும்
- 6
ரசம் தாளிப்பதற்கு ஒரு கடாயில் 3 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானவுடன் 3 வர மிளகாய் சேர்த்து பின்பு அதில் கால் டேபிள்ஸ்பூன் அளவிற்கு கடுகு சேர்த்து பொரிய விட வேண்டும்
- 7
கடுகு பொரிந்தவுடன் அதில் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் 2 தக்காளியை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கவேண்டும் அதனுடன் கால் டேபிள்ஸ்பூன் அளவிற்கு மஞ்சள்தூள் சேர்த்து தக்காளி நன்றாக வேகும் வரை வதக்க வேண்டும்
- 8
தக்காளி வெந்தவுடன் நாம் கரைத்து வைத்துள்ள புளி கரைசலை அதனுள் சேர்த்து புளிக் கரைசலின் பச்சை வாசனை போகும் வரை நன்றாக வேக விட வேண்டும்
- 9
பிறகு நாம் வேக வைத்து வைத்துள்ள பருப்பு தண்ணீரை சேர்க்க வேண்டும்
- 10
பருப்புத் தண்ணீர் சேர்த்தவுடன் பருப்பு தண்ணீர் கொதிக்கும் வரை நாம் பொறுத்திருக்க வேண்டும் அதாவது 2 கொதி வரும் வரை கொதிக்க விட வேண்டும்
- 11
பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து அரை டேபிள்ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து அதனுடன் நாம் அரைத்த மிளகு சீரகம் ரசப்பொடியிலிருந்து ஒன்றரை டேபிள்ஸ்பூன் சேர்த்து கலந்து விட வேண்டும்
- 12
ரசப்பொடி சேர்த்து கலந்து விட்டு ஒரு கொதி வரும் வரை கொதிக்கவிட வேண்டும்
- 13
பிறகு ஒரு கையளவு கொத்தமல்லி இலையை தூவி ஒரு முறை கலந்து விட்டு அடுப்பை அணைத்து விடலாம்
- 14
இதோ மிகவும் குறைவான நேரத்தில் சத்தான ஆரோக்கியமான மிகவும் சுவையான பருப்பு மிளகு ரசம் தயார் வாங்க சுவைக்கலாம்
Keywords
Similar Recipes
More Recipes





































கமெண்ட்