சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடேற்றி பாசிப்பருப்பை இளம் சிவப்பாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். பாசிப்பருப்பு மற்றும் உருளைக்கிழங்கை குக்கரில் வைத்து நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை தோல் உரித்து பொடியாக நறுக்கி கொள்ளவும்
- 2
ஒரு கடாயை அடுப்பில் ஏற்றி தேங்காய் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வறுத்தக் கொண்டு வேக வைத்த உருளைக்கிழங்கு மற்றும் பாசிப்பருப்பை இதனுடன் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும். ஒரு மிக்ஸி ஜாரில் அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.
- 3
அரைத்த கலவையை கடாயில் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து விடவும்.
- 4
சிறிது நேரம் கொதிக்கவிட்டு கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் பகுதிகளில் மிகப் பிரபலமாக செய்யக்கூடிய கடப்பா தயார். இதனை இட்லி, தோசை,சப்பாத்தி பூரியுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
Similar Recipes
More Recipes















கமெண்ட்