சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியை சூடாக்கி எண்ணெய் விட்டு வரமிளகாயை மிதமான தீயில் நிறம் மாறாமல் வறுத்துக் கொள்ளவும்.
- 2
பிறகு அதே வாணலியில் கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பை தனித்தனியாக சிவக்க வறுத்துக்கொள்ளவும்.
- 3
பின்பு மிளகையும் இலேசாக வறுத்துக்கொள்ளவும். கருவேப்பிலையை நீர் வற்றும் வரை சலசலவென்று சத்தம் கேட்கும் அளவுக்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின்பு அடுப்பை அணைத்து விட்டு சூடான வாணலியில் பெருங்காயத்தை வறுத்துக்கொள்ளவும்.
- 4
வறுத்த அனைத்து பொருட்களையும் நன்கு ஆறவிட்டு மிக்ஸியில் உப்பு சேர்த்து லேசான கொரகொரப்புடன் அரைத்துக் கொள்ளவும். இட்லி, தோசை மற்றும் அடைக்கு தோதான மிளகாய் பொடி ரெடி.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15213201






கமெண்ட் (4)