சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடம் நன்றாக வதக்கவும் பிறகு இதில் உப்பு மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி வதக்கி ஆறவிடவும்
- 2
வேகவைத்த முட்டையை சரிபாதியாக பிரித்து அதில் உள்ள மஞ்சள் கருவை வைத்த வெங்காயத்தில் சேர்த்து அனைத்தையும் கலக்கவும்... இப்போது கலந்த கலவையை முட்டையின் மேல் பகுதியில் வைக்கவும்... இதே போல் அனைத்தையும் தயாரித்து வைத்துக் கொள்ளவும்
- 3
மற்றொரு பாத்திரத்தில் கடலை மாவு அரிசி மாவு மிளகாய்த்தூள் உப்பு கரம் மசாலா சிறிது பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக கலந்து சிறிது தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்
- 4
இறுதியாக இதில் பேக்கிங் சோடா கலந்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும் பிறகு தயாரித்து வைத்திருக்கும் முட்டையை அதனுள் சேர்த்து தோய்த்து எடுத்துக் கொள்ளவும்
- 5
கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்தவுடன் மிதமான தீயில் முட்டைகளை இதனுள் சேர்த்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும் சுவையான முட்டை போண்டா தயார்
- 6
இந்த காரசாரமான முட்டை போன்றவை நீங்களும் முயற்சித்துப் பாருங்கள்
Similar Recipes
More Recipes






















கமெண்ட் (2)