கார அடை(kara adai recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அரிசியையும் பயிர்களையும் நன்கு கழுவி மூன்று மணி நேரம் ஊற வைக்கவும் பின் அடைக்க தேவையான தேங்காயை துருவிக் கொண்டு வெங்காயம் கருவேப்பிலை கொத்தமல்லி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
- 2
பின் மிக்ஸியில் மிளகாய் அரிசி பருப்பு உப்பு சேர்த்து கொஞ்சம் கொரகொரன்னு அரைத்து எடுத்துக்கொண்டு கடைசியில் தேங்காய் பூவையும் சேர்த்து ஒரு சுற்று அரைக்கவும் பின் அதில் மஞ்சள் தூளை சேர்த்து நன்கு கலக்கவும் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும் பின் வதக்கி அரைத்த மாவில் சேர்த்து கொத்தமல்லித் தழையையும் சேர்த்து கொள்ளவும்
- 3
பின் தவாவை வைத்து நன்கு காய்ந்தவுடன் என்னை தழுவி கார அடை தேவையான ஒரு கரண்டி மாவை ஊற்றி அதை பதத்திற்கு தேய்க்கவும் என் சுற்றி எண்ணெய் ஊற்றவும் அடை மேலேயும் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வேக வைத்தால் மிகவும் சுவையாக இருக்கும்
- 4
வெந்தவுடன் திருப்பிப் போட்டு எண்ணெய் ஊற்றவும் இப்பொழுது சுவையான அடை தயார் இதனுடன் காரச் சட்னி அல்லது பூண்டு சட்னி சேர்த்து சுவைத்தால் மிகவும் ருசியாக இருக்கும்.
Similar Recipes
More Recipes














கமெண்ட்