கிரீமி பன்னீர் பட்டர் மாசாலா(creamy paneer butter masala recipe in tamil)

கிரீமி பன்னீர் பட்டர் மாசாலா(creamy paneer butter masala recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் எண்ணெய் மற்றும் வெண்ணைய் சேர்த்துக் கொள்ளவும் பின்னர் வெங்காயம், பூண்டு, இஞ்சி,தக்காளி,உப்பு சேர்த்து நன்கு வதக்கிய பின்னர் மூடி வைக்கவும்
- 2
பின்னர் மூடி எடுத்து மல்லி விதை மற்றும் மிளகு சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
பின்னர் முந்திரிபருப்பு சேர்த்து நன்கு கலந்து அடுப்பை அணைத்து ஆற வைத்து மிக்ஸி ஜாரில் சிறிது தண்ணீருடன் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்..
- 4
பின்னர் கடாயில் எண்ணெயை மற்றும் வெண்ணெய் சேர்த்து பட்டை, பிரியாணி இலை,கிராம்பு,ஏலக்காய்,சீரகம் சேர்த்து நன்கு கலந்து விட்ட பிறகு தேவையான தண்ணீருடன் அரைத்து வைத்துள்ள தக்காளி பேஸ்ட்டை சேர்க்கவும்..
- 5
பின்னர் மிளகாய்த்தூள்,கரம்மசாலாதூள்,உப்பு சேர்த்து நன்கு மூடி வைத்து 20நிமிடங்கள் மிதமான தீயில் வேக விடவும்... பன்னீர் சேர்த்து கலந்து விட்டவுடன்.
கஸூரிமேத்தி,சர்க்கரை சேர்த்து கலந்து 5 நிமிடங்கள் வேக விடவும்... - 6
பின்னர் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி மற்றும் கிரீம் சேர்ந்து அடுப்பை அணைக்கவும்... சுவையான கிரீமி பன்னீர் பட்டர் மாசாலா தயார்...
Similar Recipes
More Recipes



















கமெண்ட் (2)