ரோட்டுக்கடை மீல் மேக்கர் (சோயா)(roadside soya masala recipe in tamil)

ரோட்டுக்கடை மீல் மேக்கர் (சோயா)(roadside soya masala recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மீள்மேக்கரை கழுவி வைத்துக் கொள்ளவும்
- 2
இரண்டு முறை கழுவிய மீல் மேக்கரை கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து இரண்டு நிமிடம் உப்பு சேர்த்து வேக விடவும்
- 3
மீல்மேக்கர் வெந்த பிறகு அதை மறுபடியும் இரண்டு முறை குளிர்ந்த நீரில் நன்கு அலசி வடிகட்டி பிழிந்து. அதனுடன் சிக்கன் மசாலா,சோள மாவு மற்றும் மைதா மாவு தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- 4
அனைத்தையும் தண்ணீர் சேர்க்காமல் நன்கு பிசைந்து கலக்கவும்.
- 5
நன்கு காய்ந்த எண்ணெயில் மிதமான தீயில் சிறிது சிறிதாக பொரித்து மொறு மொறு என்று எடுக்கவும்.
- 6
சாஸ் செய்ய தக்காளி வரமிளகாய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் அதில் அரைத்த விழுதை சேர்த்து அதனுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்
- 7
இப்பொழுது இதில் இரண்டு ஸ்பூன் சோளமாவை தண்ணீரில் நன்கு கரைத்து இதனுடன் சேர்த்து கொதி வந்தவுடன் இறக்கவும்
- 8
ரோட்டு கடை ஸ்டைலில், ஒரு பவுலில் நாம் தயாரித்த சாஸ் சேர்த்து அதன் மேல் பொறித்த சோள உருண்டைகளை சேர்த்து அதன் மேல் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கொத்துமல்லி இலைகள் தூவி மிளகுத்தூள் அல்லது சாட் மசாலா தூவி பரிமாறினால் அருமையான சுவையான ரோட்டுக்கடை மீல்மேக்கர் தயார் 😋😋😋
- 9
குறிப்பு
அவரவர் விருப்பத்திற்கு க்கேற்ப பச்சை மிளகாய் அல்லது வரமிளகாய் சேர்த்துக் கொள்ளலாம்.
Keywords
Similar Recipes
More Recipes




















கமெண்ட் (4)