ரோட்டு கடை பருத்தி பால் / தேங்காய் பால் 🥂🤤😋(paruthi pal recipe in tamil)

உடலுக்கு மிகவும் சத்தானது குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் ஏற்றது. பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகளிலிருந்து தீர்வு காண சிறந்த ஒரு பானம். மழைக்காலங்களில் சூடாக பருகும் போது சளித்தொல்லையில் இருந்து கூட விடுபடலாம்.
ரோட்டு கடை பருத்தி பால் / தேங்காய் பால் 🥂🤤😋(paruthi pal recipe in tamil)
உடலுக்கு மிகவும் சத்தானது குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் ஏற்றது. பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகளிலிருந்து தீர்வு காண சிறந்த ஒரு பானம். மழைக்காலங்களில் சூடாக பருகும் போது சளித்தொல்லையில் இருந்து கூட விடுபடலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
பருத்தி விதையை நன்கு கழுவி இரவெல்லாம் ஊற வைத்து கொள்ள வேண்டும். பச்சரிசி இரண்டு மணி நேரம் ஊறவைத்து கொள்ள வேண்டும்.
- 2
ஊற வைத்த பருத்தி விதையை நன்கு அரைத்து பால் எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு மூன்று முறை பால் எடுக்க வேண்டும். பிறகு பச்சரிசியையும் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு மைய அரைத்துக் கொள்ள வேண்டும்.
- 3
இப்பொழுது அடிகனமான பாத்திரத்தில், பருத்தி விதையில் எடுத்த பாலையும்,பச்சரிசியில் அரைத்த மாவையும் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பிறகு அதை அடுப்பில் மிதமான தீயில் வைத்து கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் அடி பிடிக்காமல் பச்சை வாசம் வராமல் இருக்கும்.
- 4
கெட்டியான பதம் வந்தவுடன் சுத்தமான வெல்லமாக இருந்தால் அப்படியே அதில் கலந்து கிளறி கொள்ளலாம் அல்லது சிறிதளவு தண்ணீரில் வெல்லம் சுக்குத்தூள் ஏலக்காய் தூள் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
- 5
கடைசியாக தேங்காய் துருவல் போட்டு நமக்கு தேவையான பக்குவத்தில் சூடாகப் பருகலாம் சுவைக்காக சிறிதளவு பால் சேர்த்து கூட பருகலாம்.
- 6
இப்பொழுது சூடான சுவையான ரோட்டு கடை பருத்திப்பால் தயார். மிகவும் ஆரோக்கியம் நிறைந்தது. சுவையும் அதிகம் நீங்களும் சமைத்து ருசித்துப் பாருங்களேன். 🥂🤤
Keywords
Similar Recipes
More Recipes
- தலைப்பு : கேரளா ப்ளாக் ஹல்வா (தேங்காய் பால் ஹல்வா)(kerala black halwa recipe in tamil)
- * மில்லட், ரவா குலோப் ஜாமூன் *(millet rava gulab jamun recipe in tamil)
- தேங்காய் பாசிப்பருப்பு ஸ்வீட்(thengai pasiparuppu sweet recipe in tamil)
- பிரட் பிட்ஸா(bread pizza recipe in tamil)
- Millk sweet recipe in tamil





















கமெண்ட்