பொட்டுக்கடலை பக்கோடா (Potukadalai Pakoda recipe in tamil)

#Kk குழந்தைகள் சிறப்பான உடல் வளர்ச்சியினை பெறவும், அவர்களின் உடல் தசைகளின் வலுவிற்கும் மிகவும் அத்தியாவசியமான ஒரு சத்து புரதச் சத்து ஆகும்.
ஆரோக்கியமாக பொட்டுக்கடலை பக்கோடா இதை டிரை பன்ணுங்க.

சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸி ஜாரில் பொட்டு கடலையை சேர்த்து நன்கு அரைத்து தனியாக எடுத்து வைக்கவும். பின்பு சல்லடையில் அரைத்த பொட்டு கடலை மாவு, அரிசி மாவு சேர்த்து சலித்து கொள்ளவும்.
- 2
ஒரு கிண்ணத்தில் மெலிதாக நறுக்கிய பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை, கருவேப்பிலை, மஞ்சள் தூள், மிளகாய் தூள், பெருங்காயத்தூள், தேவையான அளவு உப்பு, சீரகம், மற்றும் இடித்த பூண்டு, பொட்டு கடலை மாவு, அரிசி மாவு தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து பிசையவும்.
- 3
- 4
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றிய பின்பு பிசைந்த மாவை சேர்த்து பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.
- 5
பொட்டுக்கடலை பக்கோடா தயார்!
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட் (4)