கசகசா காஜா(kajada recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் மைதா,உப்பு, நெய் சேர்த்து கலக்கவும். அடுத்து படிப்படியாக தண்ணீர் சேர்த்து கலந்து மாவை 20 நிமிடம் ஊறவிடவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீரை சேர்த்து கொதிக்க விடவும். பின்பு ஏலக்காய் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
- 3
மிக்ஸி ஜாரில் பாதாம் பருப்பை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பிறகு கல்லில் மைதா மாவை தூவி ஊறிய மாவை வைத்து மாவின் மீதும் மாவை தூவி திரட்டவும். சமமாக திரட்டிய பின்பு மாவின் ஓரங்களை வெட்டவும்.
- 4
இதன் மேல் பாதாம் பவுடரை சேர்த்து சிறிது மைதா மாவை தூவி சுருட்டவும். அடுத்து சுருட்டிய மாவை சிறிய துண்டுகளாக வெட்டவும்.
- 5
ஒரு கடாயில் வறுக்க தேவையான எண்ணெயை ஊற்றி சூடாக்கி வெட்டிய காஜா துண்டுகளை மெதுவாக சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை வறுக்கவும். பிறகு அவற்றை கடாயில் இருந்து எடுத்து சர்க்கரை பாகில் சேர்த்து 10 நிமிடம் ஊறவைக்கவும். பிறகு இதன் மேல் வறுத்த கசகசாவை சேர்த்து பரிமாறவும்.
- 6
கசகசா காஜா தயார்!
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
















கமெண்ட் (2)