மொறு மொறு டீ கடை கஜடா

எல்லோருக்கும் பிடித்தமான டீ கடை காஜடாவை முட்டை சேர்த்து தான் செய்வார்கள், அதை முட்டை சேர்க்காமல் அதே அருமையான சுவையில் நான் செய்துள்ளேன்..எனக்கு மிகவும் பிடித்தமான ஸ்னாக்...
மொறு மொறு டீ கடை கஜடா
எல்லோருக்கும் பிடித்தமான டீ கடை காஜடாவை முட்டை சேர்த்து தான் செய்வார்கள், அதை முட்டை சேர்க்காமல் அதே அருமையான சுவையில் நான் செய்துள்ளேன்..எனக்கு மிகவும் பிடித்தமான ஸ்னாக்...
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையானவற்றை எடுத்து வைத்துக்கவும். ஒரு பரந்த பாத்திரத்தில் மைதா, அரிசி மாவு, ரவை, சமையல் சோடா, உப்பு சேர்த்துவைத்துக்கவும்
- 2
ஒரு மிக்ஸியில் சக்கரை, ஏலக்காய் சேர்த்து பவுடர் பண்ணின பிறகு எடுத்து வைத்திருக்கும் தயிர் சேர்த்து ஒரு சுத்து சுத்தி எடுக்கவும்
- 3
சக்கரை தயிர் கலவையை மைதா மாவுடன் சேர்த்து நன்கு கலந்து பிசையவும்.
- 4
பிறகு கொஞ்சம் கொஞ்சமா பால் தெளித்து பிசையவும், அத்துடன் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து ஒரு மூடி போட்டு மூடி 10 நிமிடம் வைக்கவும்
- 5
பிறகு அவரவர் விருப்பத்துக்கேர்ப்ப, பெரிதாகவோ, சின்னதாகவோ பால்ஸ் செய்துக்கவும்
- 6
ஸ்டவ்வில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் வைத்து உருண்டைகளை ஒவொன்னக் எண்ணையில் எடுத்து போட்டு திருப்பி விட்டு வறுக்கவும்
- 7
நன்கு வெந்து பொன்னிறமானதும் எண்ணையில் இருந்து எடுத்து விடவும்.. நன்றாக உப்பி, எல்லா பக்கவும் அழகா வெடிச்சு.அருமையான தோற்றத்தில் கஜடா தயார்... முட்டை சேர்த்து செய்ததுபோல் உள்ளே சம்ப்டா, வெளியில் மொறுமோறுப்பாக மிக சுவையான கஜடா சுவைக்க தயார்...
Keywords
Similar Recipes
More Recipes
























கமெண்ட் (3)