*மேங்கோ குல்ஃபி* (எனது, 525 வது ரெசிபி)

இது, இதயத்தையும், மூளையையும், பலப்படுத்தி நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். நரம்புத் தளர்ச்சியை போக்கும்.
*மேங்கோ குல்ஃபி* (எனது, 525 வது ரெசிபி)
இது, இதயத்தையும், மூளையையும், பலப்படுத்தி நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். நரம்புத் தளர்ச்சியை போக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
அடுப்பை மிதமான தீயில் வைத்து, கடாயில், பாலை ஊற்றி 3/4 பாகம் குறுகும் அளவு கொதிக்க விடவும்.
- 3
ஆறின பாலில் சோள மாவை நன்கு கட்டியில்லாமல் கரைத்து, ஊற்றி கைவிடாமல் கிளறவும்.
- 4
சிறிது கெட்டியானதும், ஏலத்தூள், சர்க்கரை போட்டு, கொதித்து குறுகினதும் அடுப்பை நிறுத்தி விடவும்.
- 5
மிக்ஸி ஜாரில், மாம்பழத்தை தோல் சீவி சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி, மைய அரைக்கவும்.
- 6
அரைத்ததும், ஆறின பாலை சிறிது சிறிதாக விட்டு நன்கு அரைத்து, பௌலுக்கு மாற்றவும்.
- 7
மேலே நறுக்கின முந்திரியை போட்டு நன்கு கலந்துக் கொள்ளவும்.
- 8
பிறகு, கலந்ததை டம்ளர்களில் 3/4 பாகம் ஊற்றவும்.
- 9
டம்ளர் மேல் ஃபாயில் சுற்றி ரப்பர் பேண்ட் போட்டு நடுவில் ஐஸ்கிரீம் குச்சிகளை சொருகி, ஃப்ரீஸரில் 8 மணி நேரம் வைக்கவும்.
- 10
பின் பௌலில் சிறிது தண்ணீர் ஊற்றி டம்ளர்களை 2 நிமிடம் வைத்து எடுக்கவும்.
- 11
இப்போது, சுவையான, சுலபமான, வித்தியாசமான,*மாம்பழ குல்ஃபி*தயார்.செய்து பார்த்து, அசத்தி, சம்மரை என்ஜாய் செய்யவும்.
- 12
குறிப்பு:- மாம்பழ சீசனை நன்கு பயன்படுத்திக் கொள்ளவும். குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ரெசிபி இது. எனக்கு 1/2 லி பாலுக்கு, 4 குல்ஃபி வந்தது.
Keywords
Similar Recipes
More Recipes






















கமெண்ட் (2)