சமையல் குறிப்புகள்
- 1
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விடாமல் வேறும் சட்டியில் கடலைப்பருப்பை வறுக்கவும். 2 நிமிடம் ஆனதும் துவரம் பருப்பைச் சேர்த்து இளம் சிவப்பாக மாறும் வரை வறுக்கவும்.
- 2
3 நிமிடம் கழித்து மேலே கொடுத்துள்ளவற்றில், இருக்கும் மற்ற அனைத்து பொருட்களையும், வறுத்தவற்றோடு ஒன்றாகச் சேர்த்து வறுத்தெடுக்கவும். எல்லாம் இளம் சிவப்பு நிறத்துக்கு வந்ததும் அடுப்பை அணைத்து ஆறவிடவும்.
அடுப்பை சிறு தீயில் வைத்து வறுக்கவும். - 3
பிறகு இதை மிக்ஸியில்போட்டு பொடியாக்கி கொண்டால், வீட்டிலேயே தயாரித்த சுவையான ரசப்பொடி ரெடி.
- 4
ரசம் வைக்கும் போது பூண்டு, காய்ந்த மிளகாய், தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், புளி, வேகவைத்த துவரம்பருப்பு, உப்பு, வெள்ளம் சுண்டைக்காய் அளவு, கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து பிசைந்து 1 கப் தண்ணீர் சேர்த்து கொதித்ததும், ரசக்கலவையில் இந்த பொடியைச் சேர்த்து கலந்து பிறகு தாளிப்பு சேர்த்து நுரை பொங்கி வர அடுப்பை அணைத்து வெந்தயப்பெடி சேர்த்து பரிமாறவும்.
- 5
ஒரு ஃபாயில் கவரில் போட்டு குளிர்சாதன பெட்டியில் வைத்துவிட்டால் நீண்ட நாட்கள் வரும்.
Similar Recipes
More Recipes




கமெண்ட்