நோன்பு கஞ்சி

நோன்பு துறக்கும் சமயத்தில் இசுலாமியர்களின் உணவில் கட்டாயம் இடம்பெறுவது நோன்புக் கஞ்சிதான்!! காரணம், நாள் முழுவதும் ஏதும் உண்ணாமல் நோன்பிருப்பதால், இந்த கஞ்சி உடலுக்கு புத்துணர்வையும், அனைத்து விதமான சத்துக்களையும் அளிக்கும்.. எனவே எங்கள் இல்லத்தில், நோன்பு காலம் அல்லாது மற்ற நாட்களிலும் வாரம் ஒரு முறையேனும் காலையுணவில் இடம் பெற்றுவிடும் இது

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு குக்கரில், அரிசி,பருப்பு, வெந்தயம், பூண்டு மற்றும் கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி ஆகியவை சேர்த்து தண்ணீர் ஊற்றி 4 விசில் (அ) குழைய வேக விடவும்
- 2
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி கறி மசாலா தூள் சேர்த்து தாளிக்கவும்.
- 3
குக்கரை திறந்து இலேசாக மசித்து விட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்க விடவும். (முருங்கை கீரை சேர்க்கவும்)
- 4
தாளித்த கலவையை கஞ்சியில் சேர்த்து கொதிக்க விடவும் (இடையே பிடிக்காமல் இருக்க கிளறி விடவும்). தேங்காய்ப் பால் சேர்த்து, இறுதியாக மல்லி இலை தூவி இறக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்