சமையல் குறிப்புகள்
- 1
முதலில் புளியை ஊறவைத்து க் கொள்ளவும்.
- 2
ஒரு கடாயை அடுப்பில் வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் வறுக்க கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக மிதமான சூட்டில் சிவக்க வறுத்து ஆற விடவும்.
- 3
புளி யை நன்றாக முன்னூறு மில்லி தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.
- 4
வறுத்து வைத்த பொருள்களை மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து நைஸாக, கெட்டியாக அரைத்து கொள்ளவும்
- 5
அடுப்பில் கடாயை வைத்து மீதமுள்ள எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து உரித்த பூண்டை போட்டு லேசாக வதக்கவும் பெருங்காயம் சேர்க்கவும். அரைத்து வைதத விழுதை கொட்டி இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் வதக்கவும்.
- 6
கரைத்து வைத்த புளிகரைசலை ஊற்றி தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடவும். குழம்பு கெட்டியாகி எண்ணெய் மேலாக வநதவுடன் இறக்கி வைக்கவும் மிளகு குழம்பு ரெடி. பருப்பு துவையல் சாதம் & மிளகு குழம்பு சரியான ஜோடி.
Keywords
Similar Recipes
More Recipes




கமெண்ட்