பருப்பு உருண்டை குழம்பு

காரமான குழம்பில் வாசனையுடன் மிதக்கும் பருப்பு உருண்டைகளின் சுவை பிரமாதமாக இருக்கும். இந்த உருண்டைகளை உதிர்த்து சாதத்தில் பிசைந்து , குழம்பை தொட்டுக் கொண்டு சாப்பிடலாம். அல்லது குழம்பை சாதத்தில் ஊற்றி பிசைந்து உருண்டைகளை தொட்டுக்கொண்டும் சாப்பிடலாம். அதுவும் காலையில் செய்த இந்த குழம்பிய இரவு தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொண்டு சாப்பிடும் பொழுது காரம், உப்பு சுவைகள் ஊறி உருண்டை மிக்க சுவையாக இருக்கும்.

சமையல் குறிப்புகள்
- 1
பருப்பை கழுவி, மிளகாயுடன் சேர்த்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
ஒரு வாணலியில் 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி அதில் மல்லி, மி.வற்றல், வெந்தயம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து, ஆறியவுடன் விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- 3
ஊறிய பருப்பை பிழிந்து எடுத்து மிக்சி ஜாரில் மி.வற்றல், உப்பு, காயம் சேர்த்து கெட்டியாக, கர கர என்று அரைக்கவும்.
- 4
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, கருவேப்பிலை தாளித்து அரைத்த பருப்பு கலவையை சேர்த்து மாவு சேர்ந்து பந்தாக கெட்டியாக வருமாறு 1 - 2 நிமிடம் கிளறி இறக்கவும். ஆறியவுடன் உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
- 5
குழம்பு சட்டியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெயில் கடுகு, பெருங்காயம், கருவ்ப்பிலை தாளித்துபுலி கரைசலை ஊற்றவும். உப்பு மனஜ்ல் போடி சேர்க்கவும்.
- 6
புலி தண்ணீரில் பச்சை வாசனை போண்டவுடன், வறுத்து அரைத்த விழுதை சேர்க்கவும்.
- 7
குழம்பு நன்றாக கொதிக்க துவங்கும் பொழுது அடுப்பை சிம்மில் வைத்து உருண்டைகளை ஒவ்வொன்றாக நிதானமாக குழம்பில் போடவும்.
- 8
சிறிது நேரத்தில் உருண்டைகள் வெந்தவுடன் மேலே வரும் பொழுது அடுப்பை அணைக்கவும்.
Similar Recipes
More Recipes

கமெண்ட்