வேப்பம்பூ ரசம்

எங்கள் வீட்டில் மாதம் ஒரு முறை இந்த ரசம் கண்டிப்பாக செய்வது உண்டு. லேசான கசப்பும், நல்ல வாசனையும், காரம், சுவை மிகுந்த உடல் ஆரோக்யத்திற்கு ஏற்ற ரசம். வேப்பம்பூ சூப்பாகவும் மதிய உணவின் முன் அருந்தலாம், வேப்பம்பூ சீசன் பொழுது பூக்களை சேகரித்து நிழலில் உலர்த்தி ஒரு வருடத்திற்கு பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்வோம்.

சமையல் குறிப்புகள்
- 1
மல்லி விதை, மிளகு இரண்டையும் மிக்சியில் ஒன்றிரண்டாக பொடித்து வைத்துக் கொள்ளவும்.
- 2
வாணலியில் எண்ணெய் 3 தேக்கரண்டி ஊற்றி கடுகு, சீரகம், பச்சை மிளகாய், மிளகாய் வற்றல் தாளித்து அதில் பொடித்த மல்லி, மிளகு சேர்த்து பிரட்டி புளி கரைசலை ஒற்ற்றவும்.
- 3
அதில் உப்பு, வல்லம் சேர்க்கவும். நன்கு கொத்தித்தவுடன் அரை குப் நீர் சேர்த்து நுரைத்து வரும் பொழுது இறக்கவும்.
- 4
ஒரு தாளிப்பு கரண்டியில் 3 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி அதில் உலர்ந்த வேப்பம்பூ சேர்த்து அடர்ந்த பிரவுன் நிறம் வரும் வரை வறுத்து ரசத்தில் சேர்க்கவும்.
- 5
குறிப்பு: இந்த ரசத்திற்கு கருவேப்பிலை, கொத்தமல்லி, பெருங்காயம் போன்ற வாசனை பொருட்கள் தேவையில்லை. தேவையென்றால் தக்காளி சேர்த்துக் கொள்ளலாம்.
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்