பாலக் பன்னீர் சீஸ் தோசை

#கீரைவகைசமையல்கள்
பாலக்கீரையில் அனைத்து விட்டமின் சத்துக்கள் உள்ளது ,பன்னீர் புரோட்டீன் சத்து உள்ளது குழந்தைகளுக்கு பிடித்த வகையில் பாலக் பனீர் சீஸ் தோசை செய்து கொடுங்கள்
பாலக் பன்னீர் சீஸ் தோசை
#கீரைவகைசமையல்கள்
பாலக்கீரையில் அனைத்து விட்டமின் சத்துக்கள் உள்ளது ,பன்னீர் புரோட்டீன் சத்து உள்ளது குழந்தைகளுக்கு பிடித்த வகையில் பாலக் பனீர் சீஸ் தோசை செய்து கொடுங்கள்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து சூடாக்கவும். தண்ணீர் சூடான பின் கழுவி வைத்திருந்த பாலக்கீரையை அத்துடன் சேர்த்து ஒரு நிமிடம் விடவும்
- 2
பாலக்கீரை வெந்தவுடன் தண்ணீரை வடிக்கட்டி கொள்ளவும். ஒரு மிக்ஸி ஜாரில் வேகவைத்து பாலக்கீரை, ஒரு பச்சை மிளகாய்,ஒரு சிறிய துண்டு இஞ்சி சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்
- 3
தோசைக்கல் சூடான பின் இரண்டு கரண்டி தோசை மாவை எடுத்து தோசைக்கல்லில் ஊற்றி சுற்றிலும் நெய் அல்லது எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
- 4
அரைத்து வைத்திருந்த பாலக்கீரை தோசையின் மேல் சேர்த்து நன்றாக பரப்பி விடவும், அதன் மேல் நறுக்கிய வெங்காயமும் சேர்த்து கொள்ளவும்
- 5
ஒரு காரட் துருவியின் மூலம் பன்னீரை சிறிதாக துருவி அதை தோசையின் மேல் பரவலாக சேர்த்து அதன் மேல் சிறிதளவு சீஸ் சேர்த்து 2 நிமிடம் மூடி வைத்து எடுத்தால் சுவையான பாலக் பன்னீர் சீஸ் தோசை தயார் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்
Similar Recipes
More Recipes




கமெண்ட்