Samu Ganesan
Samu Ganesan @SamuGanesan
சாம்பார் சாதம்
வெங்காயம், காய்கறிகளை சிறிது துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.முதலில் அரிசி, பருப்பு இரண்டையும் தண்ணீர் விட்டு நன்கு அலசி நான்கு கப் தண்ணீர் ஊற்றி பத்து நிமிடம் ஊற வைக்கவும். பிறகு அந்த தண்ணீரை வடித்துவிட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி உப்பு, நெய், ப.மிளகாய், பூண்டு சேர்த்து குக்கரில் மூன்று விசில் வரை வேக விடவும்.பிறகு ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், வெட்டி வைத்த காய்கறியை போட்டு அத்துடன் சாம்பார் பவுடர், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.குக்கராக இருந்தால் காய்கறிகள் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஒரு விசிலுக்கு வேக விடவும்.காய்கறி வெந்ததும் புளி கரைசல் விட்டு நன்கு கொதித்ததும் நன்கு வெந்த பருப்பு சாதத்தை கலந்து விடவும்.கடாயை அடுப்பில் வைத்து தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து சாதத்தோடு சேர்த்து கிளறி கொத்தமல்லி இலை தூவிபரிமாறவும்.